'முதல் முறையா நிம்மதி பெருமூச்சு'...'புதிய அறிக்கையை வெளியிட்ட சீனா'...ஆனா புதுசா கிளம்பும் பூதம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் இல்லை என்று, அந்நாட்டுத் தேசிய சுகாதார ஆணையம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் நோய்த் தொற்று தற்போது புதிய ரூபத்தில் அங்குப் பரவ தொடங்கியுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரிலிருந்து தான் கொரோனா வைரஸ் முதல் முதலாகப் பரவ தொடங்கியது. இன்று உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி வரும் இந்த வைரசால் பாதிக்கப்படாத நாடுகள் என்ற கணக்கை விரல் விட்டு எண்ணிவிடலாம். முதலில் சீனாவை உலுக்கத் தொடங்கிய கொரோனாவை கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் எதுவும் அங்குப் பலிக்கவில்லை. பின்னர் சீனாவின் தொடர் நடவடிக்கைகளால், தற்போது கணிசமாக கொரோனா அங்குக் கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா ருத்திரத்தாண்டவம் ஆடிய போது அங்கு ஏராளமான உயிரிழப்புகள் பதிவான பிறகு நேற்று, முதல் முறையாக அங்கு கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை எனச் சீன சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் உயிரிழப்புகள் தொடர்ந்த நிலையில், தற்போது சீனாவின் அறிக்கை அந்த நாட்டு மக்களுக்கு சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது.
அதேநேரத்தில் சீனாவிற்கு தற்போது மற்றொரு தலைவலி ஏற்பட்டுள்ளது. சீனாவில் புதிதாக உள்ளூரில் இருந்து கொரோனா தொற்று ஏற்படவில்லை எனக் கூறினாலும், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தற்போது தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் மூலமாகவும் கொரோனா தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இது அங்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவால்' தீவிர சிகிச்சை பிரிவில் 'அனுமதிக்கப்பட்ட' பிரதமர்... உருக்கமான 'பிரார்த்தனைகளை' முன்வைக்கும் மக்கள்!
- ‘டாக்டர்கள், கேரள செவிலியர்கள் உட்பட’... ‘மருத்துவ ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு’... ‘மும்பையில் 2 மருத்துவமனைகள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்’!
- இந்த 'ரெண்டே' விஷயம் தான்... கொரோனாவை கட்டுப்படுத்திட்டோம்... 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த நாடு!
- 'இந்த' திட்டத்தின் கீழ் மக்கள்... தனியார் மருத்துவமனைகளில்... 'இலவச' கொரோனா சிகிச்சை பெறலாம்!
- 'சென்னையில் அதிகமாக கொரோனா பாதித்த பகுதி முதல்'... 'பாதிக்காத பகுதி வரை'... 'மண்டலம் வாரியாக வெளியான பட்டியல்'!
- ஊழியர்கள்' தான் எங்களோட சொத்து... அவங்க 'கஷ்டப்படுறதுக்கு' நாங்க விடமாட்டோம்!
- ஊரடங்கு உத்தரவால்... 'சென்னைக்கு' கிடைத்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க!
- “இனி 30 நிமிஷத்துல கொரோனா ரிசல்ட்!”.. தயாராகும் 1 லட்சம் ராப்பிட் கொரோனா டெஸ்ட் கிட்”! .. பீலா ராஜேஷ் அதிரடி .. வீடியோ
- 'ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு’... ‘ஊரடங்கு உத்தரவு தொடருமா?’... ‘மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்’!
- 'எம்.பி.-க்கள் நிதியை நிறுத்துவதை ஏற்க முடியாது!'... கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!... என்ன காரணம்?