'ஒரு மாசத்துக்கு மேல உயிர குடுத்து வேல செஞ்சாங்க' ... இத விட வாழ்க்கைல சிறந்த தருணம் எதுவும் இருக்க முடியாது... 'கொரோனா' மருத்துவ பணியாளர்களின் மகிழ்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீன நாட்டின் வுஹான் நகரில் கொரோனா வைரசிற்காக திறக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளது.

சீன நாட்டின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 123 நாடுகள் வரை பரவியுள்ளது. சீனாவில் மட்டும் சுமார் 80,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் சுமார் 3000 பேருக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 70 % மக்கள் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அங்கு தற்காலிகமாக திறக்கப்பட்ட 16 மருத்துவமனைகள் தற்போது முழுவதுமாக மூடப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இரவு பகலாக நோயாளிகளின் உயிரைக் காக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அயராது உழைத்தனர். தற்போது தற்காலிக மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த தருணத்தை மருத்துவ பணியாளர்கள் கொண்டாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் மகிழ்ச்சியாக மருத்துவ பணியாளர்கள் அனைவரும் தங்களது முக கவசங்களை எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

தற்காலிகமாக சீனாவில் திறக்கப்பட்ட 16 மருத்துவமனைகளில், ஆரம்பத்தில் சுமார் 15,000 பேர் வரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 15 பேர் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

CHINA, WUHAAN, CORONA VIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்