'இரு இரு, தாலிபான்களுக்கு ஒரு பாயாசத்தை போட வேண்டியது தான்'... 'ஆப்கான் மண்ணுக்குள்ள இவ்வளவு பொக்கிஷமா?'... சீனாவின் மாஸ்டர் பிளான்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் மீது சீனாவுக்கு இருக்கும் கரிசனத்திற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான்  தாலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் தூதரக அதிகாரிகளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே உலக அரங்கில் எங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் எனத் தாலிபான்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் தாலிபான்களுக்கு தங்களின் ஆதரவு உண்டு என வெளிப்படையாக அறிவித்து விட்டது. சீனா தாலிபான்களோடு நட்புடன் செயல்பட விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவின் இந்த அறிவிப்புக்குப் பின்னல் பெரும் திட்டம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய பின்னணி காரணம் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருக்கும், Rare earth material எனப்படும் அரிய தனிமங்கள் மற்றும் கனிமங்கள் தான் என செய்திகள் வெளியாகி உள்ளது.

உலகின் ஒரே சூப்பர் பவர் நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாகத் திட்டங்களைத் தீட்டி அதற்காக உழைத்து வரும் சீனா, தாலிபான்களின் இந்த வெற்றியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் முடிவில் தீவிரமாக உள்ளது.

அந்தவகையில் ஆசிய நாடுகளை எல்லாம் Belt and Road Initiative என்ற திட்டம் மூலம் இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த சீனாவின் இந்த முடிவை ஆசிய நாடுகள் பல ஒப்புக்கொண்டு சீனாவிற்கு வழிவிட்டு உள்ளது. இருப்பினும், இந்தியா இன்னும் இதை ஏற்கவில்லை. ஆப்கானிஸ்தானும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள இருந்த நேரத்தில் தான் தற்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் உட்கட்டமைப்பு வசதியை மாற்றும் எண்ணத்தில் தாலிபான் இருப்பதால் கண்டிப்பாகச் சீனாவின் Belt and Road Initiative திட்டத்தைத் தாலிபான் அமைப்பு வரும் நாட்களில் அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாலிபான்கள் நிச்சயம் அமெரிக்காவின் தலையீட்டை விரும்பமாட்டார்கள் என்பதால் அவர்கள் சீனாவின் ஆதரவை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள்.

இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி ஆப்கானுக்குள் நுழைய சீனா திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மண்ணில் புதைந்து கிடைக்கும் பொக்கிஷமான பல்வேறு கனிமங்கள், தனிமங்களைத் தாலிபான்கள் உதவியோடு சீனா எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அரிதான தனிமங்கள் மற்றும் கனிமங்களின் மொத்த மதிப்பு மட்டும் 2020 மதிப்பீட்டின்படி 3 டிரில்லியன் டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அங்கு அலுமினியம், லாண்டம், செரியம், நியோடைமியம், தங்கம், சில்வர், சிங்க், மெர்குரி, லித்தியம் என்று பல அரிதான கனிமங்கள் உள்ளே இருக்கின்றன. போன் தயாரிப்பு, வாகன தயாரிப்பு தொடங்கி விமானம், சாட்டிலைட் தயாரிப்பு வரை அனைத்திற்கும் பயன்படும் அரிதான கனிமங்கள் ஆப்கான் உள்ளே புதைந்து கிடப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே  தாலிபான்களுக்கும், புதிய ஆப்கான் அரசுக்கும் பொருளாதார ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் உதவ வேண்டும் என்றால் எங்களுக்கு இந்த கனிம திட்டங்களைக் கொடுக்க வேண்டும் எனச் சீனா நிச்சயம் செக் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான், இலங்கையில் கட்டுமான வசதியை ஏற்படுத்தித் தருகிறோம் என கூறிவிட்டு அந்த நாடுகளில் சீனா தனது அதிகாரத்தைச் செலுத்தி வரும் நிலையில், அதே நிலைமை தான் தாலிபான்களுக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்