"'டாக்டர்', வலி உசுரு போகுது"... 'ஆபரேஷன்' தியேட்டர் போய் பாத்ததுல... "இது எல்லாம் எப்படியா உள்ள போச்சு'ன்னு.." 'அரண்டு' போன 'மருத்துவர்'கள்!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த சில மாதங்களாக, சீனாவில் பல வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான மருத்துவ நிகழ்வுகள் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

முன்னதாக, ஒருவரின் மூளையில் இருந்து ஐந்து சென்டிமீட்டர் நீளமுள்ள புழு ஒன்றை மருத்துவர்கள் அகற்றினர். அதே போல, நபர் ஒருவர் தவறுதலாக உட்கார்ந்த போது மீன் ஒன்று அவரின் பின்னால் வழியாக உடலுக்குள் நுழைந்தது. மருத்துவர்களின் கடினமான முயற்சியால் மேற்கூறிய நபர்கள் உடலில் இருந்து அவை அகற்றப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

இத்தகைய வழக்குகளில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று மீண்டும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சீனாவை சேர்ந்த 53 வயதான நபர் ஒருவர், தனது குடலில் (rectum) சிக்கிக் கொண்ட பீர் கிளாஸை எடுக்க வேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எக்ஸ் ரே எடுத்த பின்னர், அந்த நபருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த நபரின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லாமல் அந்த பீர் கிளாஸ் அவரது குடலில் இருந்து அகற்றப்பட்டது. 6 செ.மீ நீளமும், சுமார் 5 செ.மீ வரை விட்டமும் உள்ளது. இந்த பீர் கிளாஸ் அவரது உடலிற்குள் எப்படி சென்றது என்பது குறித்து அந்த நபர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அந்த நபர், தனது பின்னால் வழியாக பீர் கிளாஸை தள்ளியதால் உள்ளே சென்றிருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்