அட, இப்படியும் ஒரு கண்டுபிடிப்பா??.. பலரையும் சபாஷ் போட வைத்த மனுஷன்.. "எங்க கனவே நனவான மாதிரி இருக்கு.."
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, இணையதளத்தில் அடிக்கடி ஏதாவது வித்தியாசமான கண்டுபிடிப்புகள் தொடர்பாகவோ அல்லது சாதாரண மனிதன் ஏதாவது புதிதாக ஒன்றை உருவாக்கியது தொடர்பான வீடியோக்களோ இணையத்தில் அதிகம் வைரலாவதை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பொதுவாக பலருக்கு தூங்கி எழுந்த பின்னரும் அதிக நேரம் பெட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரலாம். அதாவது, வேலை அல்லது பள்ளிக்கூடம் முடிந்து, ஓய்வு நேரத்தில் வீட்டில் இருக்கும் போது, முழு நேரத்தையும் கட்டிலிலேயே கழிக்க வேண்டும் என பலரும் எண்ணுவார்கள். ஆனால், எப்போதும் அப்படி இருந்து விட முடியாது.
இனி பெட்'ல எங்க வேணா போலாம்..
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த Zhu என்ற வாலிபர், பேட்டரி மூலம் ஆபரேட்டாக கூடிய சக்கரங்கள் கொண்ட கட்டில் ஒன்றை உருவாக்கி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தன்னுடைய சிறு வயதில் கட்டிலில் இருந்து எழுந்து, நேரத்திற்கு பள்ளி செல்ல மிகவும் சிரமப்பட்டுள்ளார் Zhu. இதனால், அவர் பல நாட்கள் பள்ளிக்கு தாமதமாகவும் சென்றுள்ளார். படுத்து கொண்டே பள்ளிக்குச் சென்றால் நன்றாக இருக்கும் என்றும் Zhu நினைத்துள்ளார். தன்னுடைய சிறு வயது விருப்பத்தை, 39 வயதில் நிஜமாக மாற்றி உள்ளார் Zhu.
ஏராளமான வசதிகள்..
இதற்காக ஒரு வாரம் செலவிட்டு, சக்கரத்துடன் கூடிய பெட் ஒன்றையும் அவர் தயார் செய்துள்ளார். ஜாய் ஸ்டிக் மூலம் இயங்கக் கூடிய வகையில், இந்த பெட் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் பிரேக் உள்ளிட்டவை மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் நடந்து செல்லும் அளவிற்கு வேகமாக இதனை இயக்கிச் செல்லலாம். அதே போல, முழுவதும் சார்ஜ் செய்த பேட்டரி, சுமார் 30 மைல் வரை செல்லும் அளவுக்கு இயங்கக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்ற வகையில், அந்த பெட்டையும் திருப்பி பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலத்தில், சீட் பெல்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டு வரவும் Zhu முடிவு செய்துள்ளார். அதே போல, இந்த வீடியோவில் அவர் பெட் மூலம் பல இடங்களுக்கு சென்று தங்கும் காட்சிகளும், அதில் இருந்த படி மீன் பிடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதனைக் காணும் நெட்டிசன்கள் பலரும், தங்களுக்கு நிச்சயம் இது போன்ற ஒரு கட்டில் தேவைப்படும் என ஜாலியாக கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.
மேலும், எழுந்து நடக்க இயலாத முதியவர்களுக்கு நிச்சயம் இது போன்ற ஒரு பெட், பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மருந்து கண்டுபிடிக்கும் முன்பே...' 'கொரோனா வைரஸ்' தானாக 'அழிந்துவிடும்...' 'ஆறுதல் அளிக்கும் விஞ்ஞானியின் கூற்று...'
- 'கொரோனாவைக்' கொல்லும் 'புறஊதாக்கதிர் டார்ச் ...' 'மஹாராஷ்ட்ரா' மாணவர்களின் 'அசத்தல்' கண்டுபிடிப்பு... சிறந்த 'கிருமிநாசினியாக' செயல்படும் என்றும் 'விளக்கம்...'
- ‘தொட்டா ஷாக் அடிக்கும்!’.. ‘இந்த செருப்ப மட்டும் கால்ல போட்டுக்கங்க’.. ‘வேற லெவல்’ கண்டுபிடிப்பு!