'ரெடி ஜூட்!'... 'வேகமா ஓடியா... வேற ஏதாவது வர்றதுக்குள்ள வாழ்ந்து முடிச்சிருவோம்!'... உகான் நகரில் முண்டியடித்துக் கொண்ட காதல் ஜோடிகள்!... சீனாவில் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் உகான் நகரில் ஊரடங்கு நீக்கப்பட்டதையடுத்து, திருமணம் செய்ய காதல் ஜோடிகள் முண்டியடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் விழிபிதுங்கி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும்  வேளையில், வைரஸ் தாக்கத்தின் ஆரம்பப்புள்ளியான சீனாவின் உகான் நகரம் நோய் பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது. இதன் விளைவாக, உகானில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விலக்கப்பட்டதால், அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஊரடங்கால் பிரிந்திருந்த காதல் ஜோடிகள், திருமணத்திற்கான ஆன்லைன் விண்ணப்பம் பெறுவதில் முண்டியடித்துக்கொண்டதாக அலிபே (Alipay) என்ற இணைய திருமண நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், "திருமணம் செய்து கொள்வதற்கான விண்ணப்பம் பெறுவோரின் எண்ணிக்கை நாங்கள் கணித்ததைவிட 300 மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால், எங்கள் செயலி சிறிது நேரம் ஆட்டம் கண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், முன்னதாகவே திருமணம் செய்து கொண்டிருந்த தம்பதியினர், தங்களின் திருமணத்தை பதிவு செய்துகொள்ள வேண்டுமெனில், அவர்களுக்கு எந்த நோய்த்தொற்றும் இல்லை என மருத்துவச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மில்லியின் மக்கள் வசிக்கும் உகான் நகரில், கொரோனா எதிரொலியால் கடந்த இரண்டு மாதங்களாக திருமண விண்ணப்பங்களின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 76 நாட்கள் ஊரடங்கு முடிந்த பின்னர், திருமணத்தின் மீதான காதல் ஜோடிகளின் ஆர்வம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, வீட்டிலேயே முடங்கியிருப்பதால் தம்பதிகளுக்கு இடையே சண்டைகள் அதிகமாகி விவாகரத்து விண்ணப்பங்கள் அதிகளவில் குவியும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்த சம்பவம் இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

இவை அனைத்துக்கும் மேலாக, தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் 'குழந்தை பெயர்களை' அறிந்துகொள்ள அந்த ஆன்லைன் ஆப் நிறுவனம் வழிவகைசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்