அருகில் ‘கொரோனா’ பாதிப்புள்ளவர்கள் இருக்கிறார்களா?... ‘கண்டறிய’ உதவும் புதிய ‘ஆப்’ அறிமுகம்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அருகில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் இருக்கிறார்களா என்பதை தெரிந்துகொள்ள உதவும் புதிய ஆப் ஒன்றை சீன அரசு வெளியிட உள்ளது.

கொரோனா பாதிப்பால் சீனாவில் மட்டும் இதுவரை 1,380 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உலகளவில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைரஸ் தாக்குதால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மிக எளிதாகப் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.

இந்நிலையில் சீனா புதிய ஸ்மார்ட் போன் ஆப் ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆப் மூலமாக தங்களுக்கு அருகில் உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆப்பிற்கு செல்போன் எண், நபரின் பெயர், ஐடி எண் ஆகியவை தேவை எனவும், இந்த ஆப் வரும் திங்கட்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

CHINA, CORONA, APP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்