Heat பண்ணாலும் உருகாத ஐஸ்க்ரீம்.. குதூகலமான ஐஸ்க்ரீம் பிரியர்கள்.. "வெயில்'ல வெச்சு கூட இத குடிக்கலாம் போலயே.."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மக்கள் பலரின் ஃபேவரைட்டாக நிச்சயம் ஐஸ்க்ரீம் இருக்கும். ஏனென்றால், சில்லென இருக்கும் இந்த ஐஸ்க்ரீம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், ரசித்து ருசித்து குடிக்கலாம்.

Advertising
>
Advertising

ஆனால், இதே ஐஸ்க்ரீமை உருகி முடிவதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்பது தான் மிகப் பெரிய டாஸ்க் ஆக இருக்கும். பிரிட்ஜில் இருந்து எடுத்து, சில நிமிடங்கள் வைப்பதற்கு முன்பே, ஒரு ஐஸ்க்ரீம் உருகி ஓட தொடங்கி விடும்.

அதிலும் குறிப்பாக, வெயில் காலத்தில் ஒரு ஐஸ்கிரீமை குடித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். ஐஸ்கிரீம் என்றாலே, சில நிமிடங்களில் உருகி விடும் என்பது தான் ஒரு விதி போல உள்ளது.

வெப்பத்திலும் உருகாத ஐஸ்க்ரீம்

அப்படி இருக்கும் நிலையில், சீனாவில் ஒரு நிறுவனம் உருவாக்கி உள்ள ஐஸ்கிரீம், பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் பீஜிங் நகரத்தை சேர்ந்த சைய்ஸ்கிரீம் (Chicecream) என்ற நிறுவனம், மிக வித்தியாசமான ஒரு ஐஸ்கிரீமை தயாரித்துள்ளது. இது தொடர்பாக அந்த அந்த ஐஸ்கிரீம் நிறுவனம் வீடியோ ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அவர்கள் தயாரித்துள்ள ஐஸ்கிரீமை நெருப்பால் ஒரு நபர் சுடவே, அந்த ஐஸ்கிரீம் ஒரு சொட்டு கூட உருகாமல் அப்படியே இருக்கிறது. இந்திய மதிப்பில், இதன் விலை சுமார் 800 ரூபாய் வரை என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 31 டிகிரி செல்சியஸில் நெருப்பால் சுட்ட போதும், அது உருகவே இல்லை. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில், மக்கள் மத்தியில் கேள்வி உருவாகாமலும் இல்லை.

நிறுவனம் கொடுத்த விளக்கம்

பலரும் இது கண்டு ஆச்சரியமடைந்தாலும், சிலர் சற்று பயமும் கொண்டனர். நெருப்பில் கூட ஒரு ஐஸ்கிரீம் உருகவில்லை என்றால், அதில் நிச்சயம் ஏதாவது ரசாயனங்கள் கலக்கப்பட்டு இருக்கும் என்ற ஒரு பயம் தான் அது. ஆனால் இதற்கும் அந்த ஐஸ்கிரீம் நிறுவனம் தக்க விளக்கத்தை அளித்துள்ளது.

தங்களின் ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப் பொருட்கள் அனைத்தும் சீனாவின் தேசிய உணவு பாதுகாப்பு விதிவிலக்கிற்கு உட்பட்டவை தான் என்றும், ஐஸ்கிரீம் உருகவில்லை என்றால், அதில் ரசாயனம் சேர்க்கப்பட்டிருக்கும் என்ற அச்சம் மக்களுக்கு தேவை இல்லை என்றும், இயற்கையான மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பாதுகாப்பான ஐஸ்கிரீமாக இது தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

உருகாத ஐஸ்கிரீம் தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில், இதை ருசி பார்க்கவும் மக்கள் தயாராகி விட்டனர். இனிமேல் இது போன்ற ஐஸ்கிரீம்கள் பல இடங்களில் உருவாகும் என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ICE CREAM, CHINA, BEIJING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்