'21 பேரை கொன்ற பஸ் டிரைவர்...' 'காதலிக்கு கடைசியா ஒரு ஒரு வாய்ஸ் மெசேஜ், அதுல...' எதுக்காக இப்படி பண்ணினார்...? - கோர சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அன்ஷுன் நகரத்தில் கடந்த 7-ம் தேதி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் திடீரென அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குளானது.
இந்த பயங்கர விபத்தில் 12 மாணவர்கள் உட்பட 21 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பஸ் விபத்துக்குள்ளான போது நடந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளன. போலீசாரின் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அன்ஷுன் போலீசார் கூறுகையில், ‘21 பேர் விபத்தில் பலியான சம்பவத்தில் பஸ்சின் டிரைவர் ஜாங் என்பவரும் அடங்குவார். அவர் 'ஷான்டி டவுன்' புனரமைப்பு திட்டத்தில் புதிய வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பித்தார். சீன அரசின் சட்டத்தின்படி, புதியதாக வீட்டுவசதி கோருவோர், ஏற்கனவே இருந்த வீட்டை இடித்துவிட வேண்டும். அதற்கு பதிலாக நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.
அதன்படி பஸ் டிரைவர் ஜாங்குக்கும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 8 லட்சம் வரை ெகாடுக்கப்பட்டது. புதிய வீட்டை கட்டித் தரும் முன், வாடகைக்கு தங்குமிடம் கேட்டு பல இடங்களில் தேடியுள்ளார். எங்கும் அவருக்கு வாடகை வீடு கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வீடு இடிக்கப்பட்டது. அதனால் தவித்த ஜாங், வீடற்றவராக சிரமத்துக்கு ஆளானார். ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த அவர் சம்பவம் நடந்த 7ம் தேதி குடிபோதையில் பஸ்சை இயக்கி உள்ளார். சீன மதுபான பாட்டில் பஸ்சில் இருந்தது. சம்பவம் நடப்பதற்கு முன் தனது காதலிக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், இன்று ‘உலகம் சோர்வடையும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த கோர சம்பவம் மக்களிடையே பயங்கர ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சீனா அருகே பரபரப்பு!.. 'புபோனிக் பிளேக்' நோய்க்கு 15 வயது சிறுவன் பலி!.. பதறவைக்கும் பின்னணி!
- “தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ரயில் சேவைகள் இயங்காது!!”.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
- “என்ன ஆனாங்கனே தெரியல.. உண்மைய சொல்லியிருந்தா எனக்கும் இதான் நடந்திருக்கும்!”.. ‘மிரளவைக்கும்’ ரகசியங்கள்.. போட்டு உடைத்த சீன பெண் விஞ்ஞானி!
- கொரோனாவ விட 'கொடிய' நோய்... எங்க 'நாட்டு'ல பரவுதா?.... 'சீனா' பொய் சொல்லுது,,, அத நம்பாதீங்க!
- 'கொரோனாவ விட கொடிய நோய் இந்த நாட்டுல இருக்கு...' 'இதைவிட மூணு மடங்கு ஸ்பீடா பரவுது...' - சீனா கடும் எச்சரிக்கை...!
- 'கொரோனா இருக்கும்னு நடுரோட்ல வச்சு...' 'பஸ்ல இருந்து இறக்கி விட்ட பெண் பலி...' போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்திருக்கு...' - என்ன காரணம்...?
- “இது ஆவறது இல்ல!”... ‘விடிஞ்சி எழுந்ததும் இப்படி ஒரு முடிவை எடுத்து’.. ‘ஷாக் கொடுத்த டிரம்ப்’! கொரோனா இன்னும் என்னலாம் செய்ய போகுதோ!
- 'சேட்டா பஸ்சை நிறுத்துங்க'... 'மூச்சிரைக்க ஓடி வந்த பெண்'... 'பஸ்சை நிறுத்தியதும் நடந்த சம்பவம்'... நெகிழ வைக்கும் வைரல் வீடியோ!
- VIDEO: "என்ன நடந்துச்சுன்னே தெரியல... பார்த்தா, திடீர்னு பஸ் 'தண்ணிக்குள்ள' மூழ்கிட்டு இருக்கு..." - சாலையில் ஓடிக்கொண்டிருந்த 'பஸ்', ஏரிக்குள் 'பாய்ந்த' சோக சம்பவம் - 21 பேர் பலி!
- 'ஆத்தாடி என்ன ஒடம்பி'னு ஆட்டம் போட ரெடியா?.. நம்ம டிக்-டாக் குரூப் மொத்தமும் அங்க தான் கூடியிருக்கு!.. 'பங்கா'வில் பங்கம் செய்யும் இந்தியர்கள்!