தூதரகத்தை இழுத்து மூடிய சீனா...! இனி 'அங்க' வேலையில்ல.. 'கிளம்புங்க எல்லாரும்...' அதிர்ந்து போன நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீன அரசு லிதுவேனியா நாட்டில் இருந்து தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப அழைத்துள்ளது. இதன் காரணமாக இருநாடுகளின் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

தைவான் நாட்டை தன்னுடைய நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த சீன அரசு, தைவானை அமைதியான முறையில் தங்கள் நாட்டுடன் இணைக்க தீவிரமான முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், தைவான் அரசோ அதனை ஏற்காமல், தாங்கள் இறையாண்மை கொண்ட உறுதியான அரசு என கெத்தாக தெரிவித்து வருகிறது. ஆகவே, தைவானுடன் எந்த நாடாவது உறவு வைத்துக் கொண்டால், சீனா அந்த நாட்டுக்கு பல்வேறு விதங்களில் நெருக்கடி கொடுத்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், தைவானுக்கு மறைமுகமாக தனி நாடு அங்கீகாரம் அளிக்கும் விதமாக, தைவானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகத்தை தங்கள் நாட்டில் திறக்க லிதுவேனியா அனுமதி அளித்தது. இந்த தகவலை அறிந்த சீனா கடுப்பானது. சீனாவினால் இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எனவே இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்த நாட்டுக்கான தூதரக அந்தஸ்தை சீனா குறைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், லிதுவேனியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்ப அழைத்ததுடன், அந்த நாட்டின் தூதரையும் சீனா வெளியேற்றியது. இதன் காரணமாக இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் முற்றியதை தொடர்ந்து, லிதுவேனியா அரசு, பீஜிங்கில் உள்ள தங்கள் நாட்டு தூதரக ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வந்தது. இந்த நிலையில் நேற்று கடைசி அதிகாரியும் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, தூதரகம் இழுத்து மூடப்பட்டது.

இதுகுறித்து லிதுவேனிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘சீனாவில் தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தூதரக செயல்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதேபோன்று, லிதுவேனியாவில் சீன தூதர்களின் அங்கீகாரத்தை புதுப்பிப்பது தொடர்பான சீனாவின் முடிவு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சீனாவுடனான பேச்சுவார்த்தையைத் பழையது போல் தொடரவும், பேச்சு வார்த்தையின் மூலம் உடன்பாடு ஏற்பட்ட பின்பு தூதரகத்தின் செயல்பாடுகளை முழுமையாக மீட்டெடுக்கவும் லிதுவேனியா தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

CHINA, TAIWAN, AMBASSADOR, LITHUANIA, லிதுவேனியா, சீனா, தைவான்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்