'தடுப்பூசி விவகாரத்தில்... புதிதாக சீனா கொடுத்துள்ள ஷாக்'... மக்களிடம் 'ரகசிய' ஒப்பந்தம்?... 'வெளியாகியுள்ள பகீர் செய்தி!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி ரகசியமாக தன் நாட்டு மக்களிடம் பரிசோதனை செய்வதாக சீனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட பல நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக சீனாவில் 11 கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், அதில் 3 தடுப்பூசிகள் மூன்றாவது கட்ட பரிசோதனையில் உள்ளன.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வரும் பல நாடுகளிலும் தாமாக முன்வந்து மக்கள் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சீனாவில் குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களை கட்டாயப்படுத்தி, ரகசியமாக தடுப்பூசி பரிசோதனை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அரசு அதிகாரிகள், அரசு நிறுவன ஊழியர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் இந்தப் பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் இந்த பரிசோதனை குறித்த தகவல்களை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது என ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்தும் பெறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ள நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள சீன தேசிய சுகாதார கமிஷனின் உயரதிகாரி ஒருவர், "உலக சுகாதார அமைப்பு ஜூலை மாதத்தில் வழங்கிய ஒப்புதலின்படியே, பரிசோதனைகள் நடக்கின்றன. எந்த விதிமீறலும் இல்லை" எனக் கூறியுள்ளார். அதேவேளையில் இதுபற்றி பேசியுள்ள மருத்துவ நிபுணர்கள், "பாதுகாப்பு உறுதி செய்யப்படாத நிலையில் கட்டாயப்படுத்தி, ரகசியமாக அதுவும் வெளியே இதுகுறித்து பேசக்கூடாது என மிரட்டப்பட்டு, தடுப்பூசி வழங்கப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" எனக் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோவையில் மேலும் 596 பேருக்கு கொரோனா!.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் மேலும் 80 பேர் கொரோனாவுக்கு பலி!.. மீண்டும் சிக்கலில் சென்னை!.. முழு விவரம் உள்ளே
- 'இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்தா?... அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா?'... சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரமாரி கேள்வி!
- கொரோனா பாதிப்பு... மருத்துவமனை சிகிச்சை... 'தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை எப்படி இருக்கு'?.. சுதீஷ் தகவல்!
- "கொரோனானு தான் கூட்டிட்டு போனாங்க"... 'இளம்பெண்ணை தேடியலைந்தபோது'... 'போலீசுக்கு வந்த ஒரு போன்'... 'அடுத்தடுத்து எவ்ளோ டிவிஸ்டு!!!'...
- “அடிச்சுது யோகம்!” - கொரோனா டயத்துல இப்படி ஒரு முடிவு எடுத்த அரசு.. ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- 'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
- “குளியல் அறைக்கு போன இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!” .. 'கொரோனா' சிகிச்சை மையத்தில் நடந்த 'பரபரப்பு' சம்பவம்!
- 'அது ஒன்னுதான் இருக்க நம்பிக்கை'... 'ஆனா தடுப்பூசி வர்றதுக்கு முன்னாடியே'... 'இங்க நிலைம'... 'ஷாக் கொடுத்துள்ள WHO!!!'...
- 'ஊரடங்கு நீட்டிக்கப்படுமா'?... 'மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ள முதல்வர்'... எதிர்பார்ப்பில் மக்கள்!