திட்டமிட்டே சீன விமான விபத்து நடந்ததா? Black box-ஐ ஆய்வு செய்த அமெரிக்க நிபுணர்கள் சொன்ன பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் நடந்த விமான விபத்து குறித்து அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | #Breaking: பேரறிவாளன் விடுதலை வழக்கு.. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 132 பயணிகளுடன், கடந்த மார்ச் 21-ம் தேதி குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி சென்றது. மதியம் 1.30 மணிக்கு குவாங்ஸி மாகாணத்தில் உள்ள ஊசோவ் நகருக்கு மேலே பறந்த போது, திடீரென விமானத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து, உடனடியாக விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஊசோவ் நகரின் டெங்க் என்ற கிராமப் பகுதியில் இருக்கும் மலையில் மோதி விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த விமான விபத்து சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து விமான விபத்து குறித்து போலீசாரும், விமான நிபுணர்களும் விசாரணை மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்களும் அங்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து, விமானத்தின் கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த விமான விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளனர். அதில், ‘விமானம் 29,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது, திடீரென தனது பாதையில் இருந்து சற்று விலகியிருக்கிறது. இதனை கவனித்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு காக்பிட்டில் (விமானிகள் அறை) இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், காக்பிட்டில் உள்ள தொலைபேசி கருவிகள் செயல்பாட்டில்தான் இருந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், விமான எஞ்சினிலும் எந்தவித கோளாறும் ஏற்படவில்லை. இதனால், விமானிகளில் ஒருவர்தான் வேண்டுமென்றே இந்த விபத்தை நிகழ்த்தியிருக்க வாய்ப்புள்ளதாக கருத வேண்டியுள்ளது’ என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘விமானத்தை இயக்கிய விமானிகள் இருவரும் நல்ல மனநலம் மற்றும் உடல் நலத்துடன் தான் இருந்தனர். அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் எந்தப் பிரச்னையும் இருந்ததாக தெரியவில்லை. இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாக உடனடியாக நம்மால் முடிவுக்கு வர முடியாது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CHINA, CHINA EASTERN PLANE, CHINA EASTERN PLANE CRASHED, சீனா, விமான விபத்து

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்