30 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து நொறுங்கிய விமானத்தின் இறுதி நொடிகள்.. உலகை உலுக்கிய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீன பயணிகள் விமானம் ஒன்று 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த பதைபதைக்கும் வீடியோ இப்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

Advertising
>
Advertising

ராணுவத்துல சேரனும்..டெய்லி 10 கிமீ ஓட்டம்.. வறுமையிலும் விடாது போராடிய இளைஞர்.. வீடியோவை பார்த்துட்டு ராணுவ அதிகாரி போட்ட ட்வீட்..!

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்யு 5735 விமானம் உள்ளூர் நேரப்படி பகல் 1.15க்கு கிளம்பி மதியம் 3.07 மணிக்கு குவாங்சோவுக்கு செல்ல இருந்தது. 132 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் குவாங்சோ மாகாணத்திலுள்ள மலைப் பகுதியில் மோதி விபத்தை சந்தித்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக மலைப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

விமானம் கீழே விழுந்த பகுதியில் இயங்கிவரும் சுரங்க தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு கேமராவில் இந்த வீடியோ பதிவாகி இருக்கிறது.

FlightRadar24 அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வுஜோவை பிராந்தியத்தின் மேலே பறந்து கொண்டிருந்த விமானம் மூன்று நிமிடங்களுக்குள் 29,100 அடி உயரத்தில் இருந்து 3,225 அடி உயரத்திற்கு கீழே வந்து மலைப் பகுதியில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.22 மணிக்குப் பிறகு விமானம் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

'உயரத்தில் பறக்கும் விமானம் பொதுவாக தரையிறங்க 30 நிமிடங்களாவது எடுத்துக்கொள்ளும். ஆகவே, விமானத்தில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் விரிவான விசாரணைக்கு பிறகே தெரியவரும்' என சீன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மீட்பு பணி

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான இந்த போயிங் 737 விமானம் அடர்த்தியான மரங்களை கொண்ட மலை பகுதியில் விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 117 தீயணைப்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும் விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப்படை வீரர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமான விபத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரையில் சீன அரசாங்கம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. விமானம் விழுந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உலகத்தையே உலுக்கியுள்ள இந்த விமான விபத்தின் இறுதி காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது.

Breaking: 132 பயணிகளுடன் பறந்த விமானம் மலைப்பகுதியில் மோதி நொறுங்கிய சோகம்.. அதிர்ச்சியில் சீனா..!

CHINA, CHINA EASTERN AIRLINES, CRASH, FLIGHT CRASH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்