‘மருத்துவர்களையும் விட்டுவைக்கல இந்த கொடூர கொரோனா!’.. ‘இனி நாம பரிசோதிக்கக் கூடாது!’.. ‘புதிய முயற்சியில் களமிறங்கிய சீன மருத்துவர்கள்!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கொரோனாவின் கொடூரத்தில் உலகில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சில ஆயிரம் கணக்கானோர் உயிரிழந்தும் போயுள்ளனர். இந்த நிலையில் சீன அரசு அடுத்தடுத்த புதிய முயற்சிகளைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே வருகிறது. அவ்வகையில் கொரோனாவைக் கண்டறியக் கூடிய புதிய வகை ரோபோ ஒன்றையும் சீனா உருவாக்கியுள்ளது. இப்படி ஒரு ரோபோவைத் தயாரிக்க, இந்திய மதிப்பில் ஆகும் செலவு ரூ.54 லட்சம் என்று கூறப்படும் நிலையில், இந்த ரோபோவை தற்போது மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் நோய்த்தொற்று உண்டாகும் அபாயம் இருப்பதால், அவர்களுக்கு உதவும் வகையிலான இந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய ஆய்வாளர்கள், இந்த ரோபோவின் மூலம் மருத்துவர், நோயாளியிடம் நெருங்காமலே நோயாளியை பரிசோதனை செய்ய முடியும் என்றும், தற்போது 2 ரோபோக்களை உருவாக்கி பரிசோதனை முறையில் மருத்துவமனையில் இயக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

CORONAVIRUSOUTBREAK, DOCTORS, ROBOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்