'சீனா நினைத்திருந்தால்...' 'வைரஸ் பரவல் குறித்த...' 'அதிர்ச்சியூட்டும்' உண்மைத் 'தகவல்கள்...' 'அம்பலப்படுத்திய' அசோசியேட்டட் 'பிரஸ்' நிறுவனம்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா குறித்த உண்மை விவரங்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா தரவில்லை எனும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் இதுவரை சீனாவுக்கு வெளிப்படையாக உலக சுகாதார நிறுவனம் ஆதரவு அளித்து வந்துள்ளது. உலக அரங்கில் சீனாவை பாராட்டியும் வந்தது.
குறிப்பாக கொரோனா வைரசுக்கு எதிராக சீனா, வைரசின் மரபணு வரைபடத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டது என்றெல்லாம் பாராட்டி மகிழ்ந்தது, உலக சுகாதார நிறுவனம். ஆனால் உண்மை அதுவல்ல என்று நிரூபித்துக்காட்டுகிற வகையில் இப்போது அதிர்ச்சியூட்டும் சில உண்மை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பல நாடுகள் ‘முழுமையாக கொரோனா வைரசின் மரபணு வரிசைகளை கண்டறிந்த பின்னர்தான், அதை வெளியிட சீன அதிகாரிகள் அமர்ந்தனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், சீனாவில் தகவல்களை பகிர்ந்து கொள்ள இருந்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
சீன அரசின் உள் ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மூலம் இதை அந்த செய்தி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. சீன ஆய்வுக்கூடம் ஒன்று மரபணு வரைபடத்தை ஜனவரி 11-ந் தேதி வெளியிட்ட பின்னர்தான், அரசு சுகாதார அதிகாரிகள் வைரசின் மரபணு வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். அப்படி இருந்தும், உலக சுகாதார நிறுவனத்துக்கு தேவையான விவரங்களை, தகவல்களை, வழங்காமல் மேலும் 2 வாரங்களுக்கு இழுத்தடித்துள்ளனர்.
இது, ஜனவரி மாதத்தில் நடந்த உலக சுகாதார நிறுவனத்தின் உள் கூட்டங்களில் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்து இந்த செய்தி நிறுவனத்துக்கு தெரிய வந்துள்ளது. இந்தநேரத்தில் கொரோனா வைரஸ் பரவலை வியக்கத்தக்க அளவில் குறைத்திருக்க முடியும் என கூறப்படுகிறது.
தாங்கள் பெற்றுள்ள பதிவுகள், சீனாவை வெளியரங்கில் பாராட்டிய உலக சுகாதார நிறுவனம், உள்ளுக்குள் கவலைப்பட்டதை காட்டுகின்றன என அந்த செய்தி நிறுவனம் கூறுகிறது. சீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரியான டாக்டர் காடன் கலியா கூறும்போது, “சீன அரசு டெலிவிஷனில் வெளியாவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் எங்களுக்கு தகவல்களைக் கொடுக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.
இப்போது இந்த தகவல்கள் உலக சுகாதார நிறுவனத்தின் மீதான பிடியை அமெரிக்கா இறுக்கியுள்ள நிலையில்தான் வெளியுலகுக்கு வந்துள்ளன. சீனாவுடன் உலக சுகாதார நிறுவனம் கூட்டணி அமைத்துக்கொண்டது என்பதைவிட, உலக சுகாதார நிறுவனம் இருட்டில் வைக்கப்பட்டிருந்தது என்று இந்த செய்தி நிறுவனம் கூறுகிறது.
கொரோனா வைரசைப் பொறுத்தமட்டில் சீனா மிக குறைவான தகவல்களை மட்டுமே அளித்துள்ளது. ஆனால் சீனாவின் பெயர் கெட்டு விடாமல் நல்ல முறையில் திகழ்வதற்கு உலக சுகாதார நிறுவனம் முயன்றுள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய கூடுதலான தகவல்களை எப்படி சீன அதிகாரிகளை கோப்படுத்தாமல், கேட்டுப்பெறுவது என உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் கவலைப்பட்டு இருக்கிறார்கள். சீனா நினைத்திருந்தால், கொரோனா வைரஸ் பரவலை அந்த நாட்டுக்குள் கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்ற டிரம்பின் வார்த்தைகள் இப்போது நம்பத்தகுந்தவையாக இருக்கின்றன!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரு கையெழுத்து... ஒரே நாளில் உலகப் பணக்காரர்!.. 24 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பெண்!.. என்ன நடந்தது?
- "எங்கள மன்னிச்சுடுங்க"... போராட்டடத்துக்கு 'மத்தியில்'... கட்டித்தழுவி 'ஆறுதல்' சொல்லி... அசத்திய 'போலீசார்'!
- அமெரிக்காவில் ‘இனவெறிக்கு’ எதிராக வலுக்கும் போராட்டம்.. கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை ‘அதிரடி’ ட்வீட்..!
- 'எல்லைப்' பிரச்னைகளை 'சீனா மதிப்பதில்லை...' 'அண்டை நாடுகளை' அச்சுறுத்துகிறது... 'சீனாவுக்கு' எதிராக அமெரிக்காவில் 'எழும் குரல்கள்...'
- 'கருப்பின' போராட்டக்காரர்களின் 'கூட்டத்திற்குள் புகுந்த லாரி...' 'சிதறி ஓடிய கூட்டம்...' ஓட்டுநரை 'சரமாரியாக' 'தாக்கிய கும்பல்...'
- 'கொரோனா' படுத்துற பாட்டுல... இதயும் சேர்த்து 'நீங்க' அனுபவிக்கணும் பாத்துக்கோங்க... 'எச்சரிக்கும்' சீனா!
- ‘சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்...' 'இந்தியாவுடன்' சேர்ந்து செயல்பட 'முடிவெடுத்த நாடு...' 'உலக' நாடுகளுடன் சேர்ந்து 'செயல்படவும் திட்டம்...'
- 'I can't breathe'... அமெரிக்காவில் 'ஓங்கி ஒலிக்கும்' முழக்கம்... இதற்கு காரணம் 'கொரோனா அல்ல...'
- 'அந்த வீடியோ உண்மையானது அல்ல’... 'உள்நோக்கத்துடன்' வெளியிடப்பட்ட 'வீடியோ' அது... 'இந்திய ராணுவம் மறுப்பு...'
- '3.15 லட்சம்' 'ஹாங்காங்' மக்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்...' 'இங்கிலாந்து அரசின் அதிரடி அறிவிப்பு...' 'சீனா ஆத்திரம்...'