தூரத்தில் ‘கண்ணீருடன்’ மகள்... ‘அணைக்க’ கூட முடியாமல்... பணிக்கு செல்லும் ‘தாய்’... ‘கலங்க’ வைக்கும் வீடியோ...
முகப்பு > செய்திகள் > உலகம்செவிலியராக பணியாற்றும் தாய்க்கு மகள் உணவு கொண்டு வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சீனாவில் புத்தாண்டு மாதத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டு இருக்க வேண்டிய சாலைகள், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதுவரை அங்கு கொரோனா வைரஸ் தாக்கத்தால் 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், நேரம் காலம் பார்க்காமல் சேவை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செவிலியராக பணியாற்றும் தாய்க்கு மகள் உணவு கொண்டு வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுமியின் தாய் மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், சிறுமி அவருக்கு உணவு கொண்டு வருகிறார். அப்போது மகளை அணைக்கக் கூட முடியாமல் தாய் கலங்கி நிற்க, சிறுமி கண்ணீரோடு தான் கொண்டுவந்த உணவை சற்று தூரத்திலேயே வைத்துவிட்டு பின்னால் செல்கிறார். பின்னர் அவருடைய தாய் வந்து அந்த உணவை எடுத்துக்கொண்டு மகளின் முகத்தை பார்த்தபடியே மருத்துவமனைக்குள் செல்கிறார். சீனாவில் பரவி வரும் வைரஸ் தாக்குதல் தொடர்பாக பல அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'காதலரை அறிவித்த பில் கேட்ஸ் மகள்!'... 'பில் கேட்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?'...
- காலியான சாலையில் ‘முகமூடியுடன்’ கிடந்த சடலத்தால் ‘அதிர்ச்சி’... ‘கொரோனா’ பாதிப்பால் இறந்தவரா?... ‘அச்சத்தில்’ பொதுமக்கள்...
- 'சீனாவில் முகமூடி தட்டுப்பாடு!'... 'என்னவெல்லாம் பயன்படுத்துறாங்க தெரியுமா?!'... 'பதபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்!'...
- 'இது என்ன புதுசா இருக்கு'... 'கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியில்’... ‘இப்டி எல்லாம் கூடவா கொண்டாடுவாங்க’... வைரலான வீடியோ!
- 'பேயைப்' பார்த்து கூட இப்படி 'பயந்து' ஓடியதில்லை... 'சீனர்களைக்' கண்டு பயந்து ஓடிய கார், ஆட்டோ 'ஓட்டுநர்கள்'...! 'ஆந்திர' விமான நிலையத்தில் நிகழ்ந்த 'வேதனை' சம்பவம்...
- ‘தங்கையின் வீடியோவை வெளியிட்டு விடுவேன்’... வீடியோ அனுப்பி ‘மனைவியை’ மிரட்டிய ‘சென்னை’ இளைஞர்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...
- 'சீனாவுல' இருக்க எங்க மாணவர்கள 'மீட்க' மாட்டோம்'... திட்டவட்டமாக 'அறிவித்த' நாடு... ஏன்? என்ன ஆச்சு?
- 'சீனாவில் இருந்து... 'தன்னந்தனியாக'... சென்னை வந்த மாணவி'!!... 'நிறைவேறாமல் போன ஆசை!... திகைப்பூட்டும் உண்மை சம்பவம்'!...
- 'கொரோனா வைரஸிற்கு' எதிராக போராட 'துணிந்து' விட்டோம்... 'தலைமுடியை' வெட்டி கொள்ளும் 'சீன நர்ஸ்'...! 'வைரல் வீடியோ'...
- 'கட்டுக்குள்' வராத கொரோனா... 'விட்டுக் கொடுக்காத' சீனர்கள்... '2-3 மணி' நேரம் மட்டுமே உறங்கும் 'மருத்துவர்கள்'... சீனா வெளியிட்ட 'கண்கலங்க வைக்கும்' புகைப்படங்கள்...