‘புது வருஷம் பொறந்த முதல் நாளேவா..!’.. சீனாவில் பரவிய ‘புதிய’ கொரோனா வைரஸ்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் முதல் முறையாக கல்லூரி மாணவிக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை உலகம் முழுவதும் 83 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், கொரோனா கண்டறியப்பட்ட சீனாவில் வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. சீனாவில் இதுவரை 87,071 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,634 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து திரும்பிய ஷன்ஹாய் நகரைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவிக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்