எங்க நாட்டுல ‘ஒமைக்ரான்’ பரவுனதுக்கு காரணமே.. வெளிநாட்டுல இருந்து வந்த அந்த ‘பொருள்’ தான்.. புது குண்டை தூக்கிப்போட்ட சீனா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவியது குறித்து அந்நாட்டு அரசு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது.

Advertising
>
Advertising

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இது பல வகையில் உருமாறியது. அதனால் ஏற்பட்ட கொரோனா பரவலின் இரண்டாவது அலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அதனால் சீனா மீது உலக நாடுகள் பலவும் கடுமையான விமர்சனங்களை வைத்தன. இந்த வைரஸ் குறித்து முன்பே சீனாவுக்கு தெரிந்திருந்தும் அதை மறைத்துவிட்டது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதனிடையே கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதனால் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்த சூழலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல நாடுகளில் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சீனா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளது. அதில் சீனாவில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. அதனால் கனடாவில் இருந்து அமெரிக்கா மற்றும் ஹாங்காங் வழியாக சீனாவின் பெய்ஜிங்கிற்கு தபால்கள் அனுப்பட்டுள்ளன. அப்படி கனடாவில் இருந்து வந்த சர்வதேச தபால் ஒன்றில் இருந்து பெய்ஜிங்கில் முதல் ஒமைக்ரான் வைரஸ் பரவியதாக சீனா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது.

இதற்காக சர்வதேச தபால் உறைகளில் மாதிரிகளை சேகரித்து உள்ளதாகவும், அந்த உறைகளில் நடத்தப்பட்ட நியூக்ளிக் அமில சோதனையில் தொற்று உறுதியானதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தற்போது உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

CORONA, CORONAVIRUS, OMICRON, CHINA, MAIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்