'கொஞ்ச நஞ்சம் இல்ல, 70 வருஷ போராட்டம்'... 'இந்த நோயை முற்றிலும் ஒழித்தது விட்டோம்'... சீனா வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் 70 ஆண்டுக்கால போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்று உலக சுகாதார அமைப்பு (WHO)இதைப் பாராட்டியுள்ளது.

கொரோனா உலகையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், பல நாடுகளும் பெரும் சோதனைகளைச் சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சீனாவில் கடந்த 1940ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 3 கோடி பேர் மலேரியாக் காய்ச்சலுக்கு அங்கு ஆளாகினர், ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு மலேரியா காய்ச்சல் கூட இல்லாமல் சீனா சாதித்துள்ளது.

இது தொடர்பாக உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கூறும்போது, “மலேரியா நோயிலிருந்து மீண்ட சீன மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி கடினமான உழைப்பின் பலனாகும். மிகத்துல்லிய நடவடிக்கையினால்தான் சீனாவினால் இதைச் சாதிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் மலேரியா இல்லாத உலகை உருவாக்க முடியும் என்பதில் சீனா முன்னோடியாகத் திகழ்கிறது” எனக் கூறியுள்ளது.

3 ஆண்டுகள் தொடர்ச்சியாக மலேரியா காய்ச்சல் ஏற்படாவிட்டால் அந்த நாடுகள் உலகச் சுகாதார அமைப்பின் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் கறாரான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும். மேலும் மலேரியா மீண்டு ஏற்படாது என்பதற்கான நடவடிக்கைகளையும் காட்ட வேண்டும். எல் சால்வடார் (2021), அல்ஜீரியா, அர்ஜெண்டீனா (2019), பராகுவா, உஸ்பெகிஸ்தான் (2018) ஆகிய நாடுகளும் மலேரியாவை முற்றிலும் ஒழித்து விட்டன.

இந்நிலையில் 1950களில் சீனா தன் மலேரியாவுக்கு எதிரான போரைத் தொடங்கியது. கொசு ஒழிப்புத் திட்டத்தைத் தீவிரமாகக் கடைப்பிடித்தது, வீட்டுக்கு வீடு கொசு மருந்து அடிக்கப்படுவது தொடங்கியது. இப்போது இந்த மலேரியாவை வெற்றிகரமாக ஒழித்தே விட்டது சீனா.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்