Breaking: 132 பயணிகளுடன் பறந்த விமானம் மலைப்பகுதியில் மோதி நொறுங்கிய சோகம்.. அதிர்ச்சியில் சீனா..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

132 பயணிகளுடன் கிளம்பிய சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக அரசு அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

அடிக்கடி காணாமல் போன நகைகள்.. சிசிடிவி கேமராவை வச்சுட்டு வெயிட் பண்ண உரிமையாளர்.. இறுதியில் வெளிவந்த உண்மை..!

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்யு 5735 விமானம் உள்ளூர் நேரப்படி பகல் 1.15க்கு கிளம்பி மதியம் 3.07 மணிக்கு குவாங்சோவுக்கு செல்ல இருந்தது. 132 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் குவாங்சோ மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் மோதி விபத்தை சந்தித்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக மலைப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

குன்மிங் நகரிலிருந்து தெற்கு குவாங்சோவுக்கு சென்ற போயிங் 737 விமானம் குவாங்சி பிராந்தியத்தில் உள்ள வுஜோ நகரத்தின் மீது பறந்துகொண்டிருந்த போது வான்வழித் தொடர்பை இழந்ததாக சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (CAAC) தெரிவித்துள்ளது.

மீட்புப் பணி

மலைப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் பயணிகளின் நிலை குறித்து ஆராயவும் மீட்புப் படை வீரர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. 25 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 117 தீயணைப்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். இப்பகுதி அடர்ந்த மரங்களை கொண்ட மலைப் பகுதி என்பதனால் மீட்புப் பணிகள் தாமதம் ஆகலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விமானத்தில் மொத்தமாக 162 சீட்கள் இருக்கின்றன. விமானத்தில் 123 பயணிகளும் 9 பணி குழுவினரும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்பு குறித்து இதுவரையில் சீன அரசாங்கம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

திடீரென்று கீழே விழுந்த விமானம்

FlightRadar24 அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வுஜோவை பிராந்தியத்தின் மேலே பறந்து கொண்டிருந்த விமானம் மூன்று நிமிடங்களுக்குள் 29,100 அடி உயரத்தில் இருந்து 3,225 அடி உயரத்திற்கு கீழே வந்து மலைப் பகுதியில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2.22 மணிக்குப் பிறகு விமானம் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய போயிங் விமானம் ஆறரை ஆண்டுகளாக பயணிகள் சேவையில் இயங்கிவந்தது. சீனாவின் வடகிழக்கு நகரமான யீச்சூனில் கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற விமான விபத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் விமான விபத்து இதுவாகும்.

நடு ரோட்ல கும்ஃபூ.. "அங்க என்ன சத்தம்".. போலீசை கண்டதும் தெறித்து ஓடிய போதை ஆசாமி..!

CHINA, CRASHES, 132 ON BOARD, FLIGHT CRASHES, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்