கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? எலான் மஸ்க்கை தாறுமாறாக விளாசும் 'சீன' நெட்டிசன்கள், அப்படி என்ன தான் பண்ணினாரு?
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனம் மூலம் விண்வெளியில் ஏவப்பட்ட செயற்கோள் சீனா ஏவுகணை மீது மோத சென்றதாக பரபரப்பு புகாரை அளித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபரான எலான் மஸ்க் மீது சீனா கடும் கோபத்தில் உள்ளது என செய்திகள் பரவி வருகின்றனர். மேலும் சீன சமூக வலைதளமான வெய்போவில் சீன நெட்டிசன்கள் எலான் மஸ்கை சரமாரியாக திட்டித்தீர்த்து வருகின்றனர்.
எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள்:
ஏனென்றால் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சீன விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மீது இரண்டு முறை மோதப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சீனா ஐ.நா. விண்வெளி முகமையிலும் புகார் அளித்துள்ளது.
நூலிழையில் தப்பியது:
அந்த புகாரில் 'எலான் மஸ்கில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஸ்டார்லிங்க் நெட்வொர்க்கின் செயற்கைகோள்கள் கடந்த ஜூலை 1 மற்றும் அக்டோபர் 21 ஆகிய இரு தினங்களிலும் சீன விண்வெளி ஆய்வு மையம் மீது மோதவிருந்தது. சீன விண்வெளி ஆய்வு மையம் தனது தற்காப்புக் கருவி மூலம் நூலிழையில் தற்காத்துக் கொண்டது' எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்கு சீன விண்வெளி ஆய்வு மையம், கொலிஸன் அவாய்டன்ஸ் கன்ட்ரோல் (collision avoidance control) எனப்படும் மோதல் தடுப்புக் கருவியை இயக்க வேண்டியதாயிற்று என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளது.
விண்வெளி குப்பை:
இதனை குறித்து அறிந்த சீன நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் எலான் மஸ்க் மீதும், அமெரிக்காவையும் சரமாரியாக விளாசியுள்ளனர். அதில், சீன நாட்டவர் ஒருவர் 'எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள்கள் அனைத்துமே விண்வெளி குப்பை' என்று பதிவிட்டார். இன்னும் சிலர் 'எலான் மஸ்க்கில் செயற்கைகோள்கள் அனைத்துமே அமெரிக்காவின் விண்வெளி போர் ஆயுதங்கள்' என்று கடுமையாக விமர்சித்தார். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியான், 'அமெரிக்க பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலம் இதுவரை 1900 செயற்கைகோள்களை ஏவியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான செயற்கைகோள்களை ஏவத் தயாராக உள்ளது என்ற செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது.
விஞ்ஞானிகள் கவலை:
அதோடு பூமியைச் சுற்றி சுமார் 30,000 செயற்கைகோள்களும், விண்வெளிக் கழிவுகளும் சுற்றிவருவதாகக் கூறப்படுகிறது. இதில் விண்வெளிக் கழிவுகளை அகற்றப்போவது யார்? என விண்வெளிக் கழிவுகள் பற்றி விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், விண்வெளிக் கழிவுகளின் அச்சுறுத்தலால் கடந்த வாரம் நாசா, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் வீரர்கள் மேற்கொள்ளவிருந்த விண்வெளி உலா நிகழ்ச்சியை ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒருத்தரோட 'தலை' கூட வெளிய தெரிய கூடாது...! 'ஒரு நகரமே வீட்டுக்குள்ள முடங்கிடுச்சு...' - எல்லாத்துக்கும் 'காரணம்' ஒரே ஒருத்தர்...!
- Food ஆர்டர் செய்த கஸ்டமர் எழுதிய வாசகம்.. மின்னல் வேகத்தில் பறந்த டெலிவரி மேன்.. அப்படி என்ன ‘எழுதி’ இருந்தார் தெரியுமா..?
- என்னது?.. இவ்ளோ செலவாகுமா?.. கடுப்பில் 'டெஸ்லா' காரை வெடிக்க வைத்த 'உரிமையாளர்'.. வைரல் 'வீடியோ'..
- 12 நாட்கள் விண்வெளி பயணம் செய்த டாப் கோடீஸ்வரர்… எதுக்குனா தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
- பாருங்கப்பா, இது தான் நான் 'வரி' செலுத்த போற தொகை...! வரியே இவ்வளவுன்னா வருமானம்...? - 'மாஸ்' காட்டும் எலான் மஸ்க்...!
- VIDEO: ஒரு கோடி கொடுத்து ஆசையா வாங்கிய 'டெஸ்லா' காரை 'தீ' வச்சு கொளுத்திய நபர்...! என்ன காரணம்...? - டிரெண்டிங் வீடியோ...!
- 'டோஜ்காயின்' பத்தி எலான் மஸ்க் சொன்ன விஷயம்...! கொஞ்சம் நேரத்துல அதோட 'மதிப்பு' உயர்ந்திடுச்சு...! - பரபரப்பு பேட்டி...!
- தூதரகத்தை இழுத்து மூடிய சீனா...! இனி 'அங்க' வேலையில்ல.. 'கிளம்புங்க எல்லாரும்...' அதிர்ந்து போன நாடு...!
- எலான் மஸ்க் போட்டுள்ள 'மெகா' திட்டம்...! 'இது மட்டும் நடந்துச்சுன்னா வேற லெவல்...' - மனுஷன் சொன்னா செஞ்சிடுவாரு...!
- ப்ரேக் அப் ஆகிடுச்சு.. எப்படியாவது செலவு பண்ண காசை திருப்பி எடுத்திடணும்.. முன்னாள் காதலன் செய்த ‘பலே’ காரியம்..!