'கொரோனா' ஆய்வுக் கட்டுரைகளை 'வெளியிட தடை... 'சீனா அரசு' எதை 'மறைக்கப்' பார்க்கிறது... 'உலக நாடுகள் சரமாரிக் கேள்வி...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து இரு பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சீனா எதை மறைக்கப்பார்க்கிறது என உலக நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன.

கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு முடிவுகளை மருத்துவ இதழ்களில் வெளியிட சீனாவில் மேலும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இவற்றை அரசின் பலகட்ட ஒப்புதல் இல்லாமல் வெளியிட கட்டாயத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஃபிப்ரவரி மாதம் கோவிட்-19 குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளை சர்வதேச இதழ்களில் வெளியிட இந்த அளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என மருத்துவப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்துக்குப் பிறகே சீன அரசு கொரோனாவில் அகில உலக தாக்கத்தைப் பார்த்து இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மருத்துவ இதழ்களில் கொரோனா குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளியானால், சீன சமூக வலைதளங்களில் பொய் செய்திகள் அதிகரிக்கும் என்கிற அச்சம் இருப்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் சீனா அரசின் இந்த முடிவு உலக அளவில் முக்கியமாக விஞ்ஞான ஆய்வுகளை தடுக்கும் என அஞ்சப்படுகிறது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை என எதிர்கால சந்ததியினரை நம்பவைக்கும் வகையில் இந்த உத்தரவு சீன அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஒருசிலரால் கூறப்படுகிறது. கொரோனா குறித்த எதிர்விளைவுகளை எடுத்துச் சொல்லும் எந்த ஆய்வுக்கும் இனி சீன அரசால் அனுமதி அளிக்கப்படாது என சீன மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை நிரூபிக்கும் வகையில் கடந்த மார்ச் 2 அன்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரிக்கு வருகை தந்த சீன அதிபர் ஷிஜின்பிங் மருத்துவ இதழ்களில் கொரோனா ஆய்வை பிரசுரிக்கத் தடை விதிப்பதாகத் தெரிவித்தார்.

சீனாவின் பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஃபுடான் பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், சீன அரசு விதித்த கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. அந்த பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இதேபோல மற்றொரு பல்கலை இணைய தளத்திலும் அரசு அறிக்கை வெளியிடப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சீனா உலக பொருளாதாரத்தை முடக்க கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது என்ற கருத்து பரவி வரும் நிலையில், சீனாவின் சமீபத்திய செயல்பாடுகள் உலக நாடுகளிடமிருந்து உண்மைகளை மறைக்கப் பார்ப்பதை உறுதிப்படுத்துவதாக மீடியாக்கள் கூறுகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்