'ஊசி இல்ல... இது வேற லெவல் ஐடியா'!.. கொரோனாவை தடுக்க... மூக்கு வழியாக 'ஸ்பிரே' தடுப்பு மருந்து!.. வியப்பூட்டம் தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க முதல் முறையாக மூக்கு வழியாக ஸ்பிரே செய்யக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்க சீனா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகள் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரஷ்யா மருந்தை உருவாக்கிவிட்டதாக கூறி அதன் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முதல் முறையாக 'மூக்கு' வழியாக ஸ்பிரே செய்யக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
இந்த கொரோனா தடுப்பு மருந்து வரும் நவம்பர் மாதத்தில் முதலாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்காக 100 தன்னார்வலர்களை நியமிக்கப்படவுள்ளதாகவும் சீனாவின் தேசிய மருத்துவ தயாரிப்பு நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே வகை தடுப்பு மருந்து இதுவாகும் என்று அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் யுயென் குவோக்-யுங், 'தடுப்பு மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படுத்த சுவாச வைரஸ்களின் இயற்கையான தொற்று பாதையை தூண்டுகிறது. மேலும், இந்த தடுப்பூசி மக்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இரட்டை பாதுகாப்பு அளிக்கக்கூடும்' என தெரிவித்தார்.
தினசரிக்கு ஊசி மருந்துகளுடன் ஒப்பிடும்போது, ஒரு நாசி தெளிப்பு தடுப்பூசி நிர்வகிப்பது எளிதானது. மேலும் முதிர்ச்சியடைந்த இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி உற்பத்தி தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதால், வெகுஜன உற்பத்தி மற்றும் விநியோகிக்க எளிதானது என பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நோய் எதிர்ப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.
ஆனால், சீனாவின் இந்த புதிய தடுப்பு மருந்து முறையான பக்க விளைவுகளை ஏற்படுத்தாது, என்றாலும் ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் போன்ற சுவாச அமைப்பில் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று நோய் எதிர்ப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டம்'... 'முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு கொரோனா பரிசோதனை'... வெளியான முடிவுகள்!
- “வடகொரியா வரும் சீனர்களை சுட்டுத்தள்ள உத்தரவா?”.. மீண்டும் படைத்தளபதி அளித்துள்ள பரபரப்பு தகவல்!
- "சவாலை ஏற்கிறேன்!".. 'டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்' கேட்டதற்காக களத்தில் இறங்கும் 'இவாங்கா டிரம்ப்'!
- '1 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி'... 'அதுல இந்தியாவுல மட்டும்'... 'தொடர் சர்ச்சைகளைத் தாண்டி'... 'ஜெட் ஸ்பீடில் செல்லும் நாடு!'...
- 'அடுத்த மாசமே இத எதிர்பார்க்கலாம், அப்பறம்'... 'பரிசோதனையில் ஏற்பட்ட திடீர் பின்னடைவுக்குப் பின்'... 'அடுத்தடுத்து வரும் நம்பிக்கை தரும் தகவல்கள்!'...
- ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டது ஏன்?.. ஒரு சிறிய தவறால்... உலகம் முழுமைக்கும் பின்னடைவு!.. அதிர்ச்சி தகவல்!
- 'ரொம்ப எதிர்பார்த்த தடுப்பூசி'... 'அங்க என்னதான் நடக்குது?'... 'அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு நடுவே'... 'வெளியாகியுள்ள குட் நியூஸ்!'...
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'இந்தியாவில் பாதிப்பில்லை எனக் கூறப்பட்டநிலையில்... 'சீரம் நிறுவனம் எடுத்துள்ள திடீர் முடிவு'... 'கோவிஷீல்ட் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்!'...
- தமிழகத்தின் 5 மாவட்டங்களில் உச்சம் தொடப் போகும் கொரோனா பாதிப்பு!.. தலைமை செயலாளர் 'பரபரப்பு' தகவல்!