'சீனாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு...' 'குரங்கை வச்சு டெஸ்ட் பண்ணி சக்ஸஸ்...' 'மருந்துக்கு பெயர் கூட வச்சுட்டோம்...' பயோடெக் நிறுவனம் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகெங்கிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் முதலில் மனிதர்களுக்கு பரவிய இடம் சீனாவில் இருக்கும் மார்க்கெட் தான். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவிய இந்த கொடிய வைரஸ் நாளடைவில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. மனித உடல்களுக்குள் செல்லும் இந்த கொரோனா வைரஸ் பல மடங்காக பெருகி உயிர் கொல்லும் காரணியாகவே பெருகியது. உலகெங்கிலும் கொரோனா வைரசால் இதுவரை சுமார் 270,721 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா உட்பட அனைத்து உலக நாடுகளும் போட்டி போட்டு கொண்டு கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் சில நாடுகள் தடுப்பு மருந்து பரிசோதனையில் சில படிநிலைகளை கடந்துள்ளது எனலாம். ஆனால் இதுவரை மருந்தும் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மற்றும் இத்தாலி கொரோனாவிற்கு எதிராக ஆண்டிபாடிகளையும், முதல் தடுப்பு மருந்தை உருவாக்கி விட்டதாக இத்தாலியும் அறிவித்திருந்தது.
தற்போது சீனாவும் தங்களுடைய நாட்டின் சார்பில் கொரோனா வைரஸின் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்திற்கு சீனா பிகோவாக் (picovacc) எனப் பெயரிட்டுள்ளது. இந்த பிகோவாக் எனப்படும் மருந்தை பீஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் பிகோவாக் மருந்து குரங்கிற்கு செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் பின் மூன்று வாரங்கள் கழித்து மருந்து செலுத்தப்பட்ட குரங்கை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்படுத்தியதை அடுத்து, ஒரு வாரம் கழித்து சோதித்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டது.
மேலும் இந்த மருந்து செலுத்தப்படாத குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அறிவித்துள்ளனர். எனவே சீனா கண்டுபிடித்த இந்த பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. இதன் பின் அடுத்தகட்ட பரிசோதனைக்கு சீனா தயாராகி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’!
- 'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா!
- 'போர் மூளும் அபாயம்!'.. அறிக்கையை சமர்பித்த சீன அதிகாரிகள்... அதிர்ந்து போன அதிபர் ஜின்பிங்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- 'முக்கியமான' ஆய்வில் ஈடுபட்டிருந்த... 'சீன' ஆய்வாளருக்கு அமெரிக்காவில் நேர்ந்த 'பயங்கரம்'... 'அடுத்தடுத்து' கிடைத்த சடலங்களால் 'விலகாத' மர்மம்...
- 'உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம்'... 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'நாடு'...
- 'சீனாவுக்கு முன்னாடியே’... ‘அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவலா?’... 'மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்'!
- 'அந்த வைரஸ்கள் போலவே’... ‘கொரோனாவுக்கும் மருந்து கண்டுப்பிடிப்பதில்’... வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'அந்த நாட்டில் இருந்து'... 'வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க'... ‘இந்தியாவின் ராஜதந்திரம்’... ‘ஆர்வம் காட்டும் மாநிலங்கள்’!
- 'கொரோனா இயற்கை கொடுத்த தண்டனை'...'வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண்'... 'திடீரென போட்ட பதிவு'... மர்மம் விலகுகிறதா?
- 'லாக்டவுன்' தளர்த்தப்பட்டதும்... 'சீனர்களிடம்' அதிகரித்துள்ள 'ரிவென்ஜ்' ஸ்பென்டிங் பழக்கம்!... 'இந்தியர்களிடமும்' வருமா?...