மறுபடியும் lockdown- ஆ… 90 லட்சம் மக்களை வீட்டுக்குள் முடங்க உத்தரவிட்ட சீன அரசு
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதை அடுத்து தொழில் நகரத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
“நானும் 2 குழந்தைக்கு தகப்பங்க”.. நான் எப்படி ‘அந்த’ காரியத்தை செய்வேன்.. உக்ரைன் அதிபர் உருக்கம்..!
உலகைப் புரட்டிய கொரோனா
ஒட்டுமொத்த மனித குலத்தையே கொரோனா என்னும் பெருந்தொற்று அசைத்துப் பார்த்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹானில் உள்ள மக்கள் பட்ட கஷ்டங்களை பார்த்து விக்கித்துப் போன உலகம், சுதாரிப்பதற்குள் கண்டங்களை தாண்டி பரவத் துவங்கியது கொரோனா. கொத்து கொத்தாக மக்கள் மரணிப்பதை பதைபதைப்புடன் இன்றுமே பார்க்க வேண்டிய சூழல் தான் இருக்கிறது. இருப்பினும் தடுப்பூசி வந்த பிறகுதான் கொரோனாவினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் இப்போது குறைந்திருந்தாலும் அது உருவாக்கிய தாக்கங்கள் இன்னும் முழுதாக நீங்கவில்லை. பொருளாதார ரீதியிலும், தனிமனித உளவியல் ரீதியிலும் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா மூன்று அலைகள்
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவிவருவதன் காரணமாக கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் உருவாகின. இதுவரை அப்படி மூன்று அலைகள் பரவியுள்ளன. ஆனால் தடுப்பூசி காரணமாக கொரோனா மூன்றாம் அலையில் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பதே ஆறுதல். இப்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் சீனாவில் இருந்து வெளியாகியுள்ளது.
சீனாவில் மீண்டும் ஊரடங்கு
இந்நிலையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாவதை அடுத்து சில பகுதிகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (நேற்று) வடகிழக்கு தொழில்துறை நகரமான சாங்சுனில் COVID-19 பாதிப்பு அதிகமாகியுள்ளதை அந்த நகரத்தில் பொதுமுடக்கம் அறிவித்துள்ளது.
திடீரென உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை
இதன் மூலம் 9 மில்லியன் மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளின்படி, அத்தியாவசியமான காரணங்கள் இல்லாமல் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது. மேலும் அவர்கள் மூன்று சுற்று வெகுஜன சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். சாங்சுன் நகரத்தின் அதிகாரிகள்அனைத்து அத்தியாவசியமற்ற வணிக மற்றும் போக்குவரத்து இணைப்புகளையும் இடைநிறுத்தம் செய்துள்ளனர். சில நகரங்களில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்று எண்ணிக்கை அதிகமானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாது. கடந்த 2 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
“நானும் 2 குழந்தைக்கு தகப்பங்க”.. நான் எப்படி ‘அந்த’ காரியத்தை செய்வேன்.. உக்ரைன் அதிபர் உருக்கம்..!
தொடர்புடைய செய்திகள்
- இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே.. குளிர்கால ஒலிம்பிக்கில் இப்படி ஒரு டெக்னாலாஜி.. அலிபாபா கொடுத்த சர்ப்ரைஸ்!
- கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் .. '4 அல்ல 41 பேர் பலி'.. தப்பிக்க சீனா ராணுவத்தினர் செய்த பகீர்.. வெளியான தகவல்
- 20 வருஷமா தலைவலி வராத நாளே இல்ல.. டெஸ்ட் பண்ணி பார்த்தப்போ.. தெரிய வந்த அதிர வைக்கும் உண்மை
- உலகின் மிகப்பெரிய பவர் பேங்க்.. யம்மாடி, இவ்ளோ பெருசா இருக்கு.. வெளிய கொண்டு போக ஒரு குட்டி யானை வேணும் போலையே
- அமெரிக்கா வரை எதிரொலித்த ராகுல் காந்தி பேச்சு.. பாகிஸ்தான்-சீனா நட்பு பற்றி தெரிவித்த கருத்துக்கு பதிலடி
- வரும் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரண்டு குட்நியூஸ்
- எங்க நாட்டுல ‘ஒமைக்ரான்’ பரவுனதுக்கு காரணமே.. வெளிநாட்டுல இருந்து வந்த அந்த ‘பொருள்’ தான்.. புது குண்டை தூக்கிப்போட்ட சீனா..!
- சைலண்டா சீனா என்னெல்லாம் வேலை பாக்குது! சாட்டிலைட் ஃபோட்டோவில் தெரிய வந்துள்ள அதிர்ச்சி உண்மை!
- உங்களுக்கு கொரோனா இருக்கா? 15 நாள்கள் இந்த 'பாக்ஸ்'க்கு உள்ளேயே இருக்கணும்.. சீனா கொண்டு வந்துள்ள அதிரடி சட்டம்!
- பொங்கல் முடிஞ்சதும் தொடர் லாக்டவுனா?.. நீண்ட நாள் கேள்விக்கு அமைச்சர் பரபரப்பு விளக்கம்!