'சுடுதண்ணியில வேக வச்சு, 2 நாள் ஊற வைப்போம்...' 'கரப்பான் பூச்சி ஃப்ளேவர்ல பீர்...' - விற்பனை படுஜோர்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பானில் கரப்பான் பூச்சி மூலம் பீர் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியையம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

உலகின் அதிகப்படியான மக்களால் நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகை தான் இந்த பீர் என்ற மதுபானம். பொதுவாக பீர் கோதுமையில் தயாரிக்கப்படும். பெரும்பாலும் பீரில் ஆல்கஹால் அளவு 1%க்கும் (கனவளவின் படி மது) குறைவாகவும் சில அரிய வகைகளில் 20%க்கும் அதிமாகவும் காணப்படும். பொதுவாக 4% தொடங்கி 6% வரை கூட ஆல்கஹால் இருக்கும்.

இதில் அதிர்ச்சி தர கூடிய விஷயம் என்னவென்றால் ஜப்பானில் கரப்பான்பூச்சியில் இருந்து தயாரிக்கப்படுவதாகவும், அது இந்திய மதிப்பில் சுமார் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

கரப்பான்பூச்சியில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பீர் கொஞ்சு சூர் (Konchu Sour) அல்லது இன்செக்ட் சூர் (Insect Sour) என அழைக்கப்படுகிறது. இது கபுடோகாமா (Kabutokama) எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் இந்த பீர் ஜப்பானில் தனிச்சிறப்பு பெற்றிருக்கிறது.

இந்த பீர் வகைகள் இப்போது உருவாக்கப்படவில்லை, ஜப்பானியர்கள் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்த பீரை தயாரித்து குடித்து வருகின்றனராம். நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகளை பிடித்து அவற்றை வெந்நீரில் வேகவைத்து, பின்னர் இரண்டு நாட்களுக்கு அதை ஊற வைக்கின்றனர். அதன்பின்பு அதிலிருந்து எடுக்கப்படும் சாறு பீராக மாற்றப்படுகிறதாம்.

நம்மூரில் எல்லாம் கரப்பான் பூச்சியை பார்த்து பயப்படாத நபர்கள் யாருமே இல்லை, அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. வெளிநாடுகளில் எல்லாம் சொல்லவே வேண்டாம் கரப்பான் பூச்சி பிடிக்க போய் வீட்டையே கொளுத்திய சம்பவங்கள் நடந்துள்ளது.

ஆனால் ஜப்பானில் கரப்பான் பூச்சியில் இருந்து பீர் தயாரிக்கப்படும் சம்பவம் அதிர்ச்சியையும், குடிமகன்களுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், பீரில் வைட்டமின் பி-12 மற்றும் ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது. பீர் குடிக்காதவர்களை விட குடிப்பவர்களிடம் தான் இது அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

BEER, COCKROACHES, JAPAN, ஜப்பான், கரப்பான் பூச்சி, பீர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்