'செல்ஃபி எடுத்ததால் வந்த வினை'! .. 'அதிபருக்கே ₹2.5 லட்சம் ரூபாய் அபராதம் போட்ட நாடு'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிலி நாட்டில் முகக் கவசம் அணியாமல் செல்ஃபி எடுத்ததற்காக, அந்நாட்டு அதிபருக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை கொடுத்துக் கொண்டுவரும் கொரோனாவுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பரிசோதனை முயற்சியில் ஈடுபடுத்தப்பட்ட பிறகு உலக நாடுகளில் மிக முக்கியமான தடுப்பூசியான ஃபைசர் தடுப்பூசி போடப்பட தொடங்கியுள்ளது. எனினும் உலகம் முழுவதும் இந்த தடுப்பூசி இன்னும் செலுத்தப்பட தொடங்கவில்லை என்கிற நிலையில் இப்போதைக்கு கொரோனாவில் இருந்து நாம் நம்மை தற்காத்துக் கொள்ளும் முக்கிய தடுப்பு நடவடிக்கைகளாக மாஸ்க் அணிவது சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் இருக்கின்றன.

இன்னொருபுறம் உலக நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாகவும், இங்கிலாந்து போன்ற சில நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உருவாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் கடைபிடிக்கப்பட அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் சிலி நாட்டு அதிபர் Sebastian Pinera தனது சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். இவர் தனது சொந்த ஊரான Cachagua நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு ஏற்ப அந்த பெண்ணுடன் செல்ஃபி படம் எடுத்துக்கொண்டார்.

ஆனால் அவர் செல்ஃபி எடுக்கும் பொழுது முகக்கவசம் அணியாமல் இருந்தது அந்த செல்போன் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக முகக்கவசம் அணிந்து மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய அதிபரே மாஸ்க் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அபராதத் தொகை 3500 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 2.5 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்