Chess Olympiad 2022 நிறைவு நாள்.. சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து பார்த்த முதல்வர்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சென்னையில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் அண்மையில்  பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

Advertising
>
Advertising

11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரின் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் சூட் உடன் வருகை தந்தார். மற்றும் பல முக்கிய திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் வருகை தந்த இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அதில், “புறநானூறு பாடலில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என 2000 ஆண்டுகளுக்கு முன் கனியன் பூங்குன்றனார் கூறியிருந்தார். அதன் அர்த்தம் உலகில் உள்ள அனைவரும் நம் சகோதாரர்கள் என்பதுதா. அதே சகோதரத்துவ எண்ணத்துடன் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியதாக பல வெளிநாட்டு வீரர்கள், பயிற்சியாளர் சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவில் நடந்த மிக பெரிய பன்னாட்டு திருவிழாவாக அமைந்த இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை சென்னையில் நடத்த ஒப்புதல் அளித்த சர்வதேச செஸ் கூட்டமைப்புக்கு மனமார்ந்த நன்றி.” என பேசினார். இந்நிகழ்ச்சியில் தான் டிரம்ஸூடன் வந்த பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணியின் டிரம்ஸ் ஸ்டிக்கை வாங்கிய முதல்வர் ஸ்டாலின் தானும் டிரம்ஸ் வாசித்து பார்த்தார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என முன்னணி தமிழ் மற்றும் இந்திய இசைக் கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ள டிரம்ஸ் சிவமணி, அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வாசித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தில் இருந்து பொன்னி நதி பாடல் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MKSTALIN, DRUMS SIVAMANI, CHESS OLYMPIAD 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்