‘Jetpacks’ ரீல் இல்ல.. ரியலாவே உலகில் வந்திடுச்சு.. அரவிந்தன் ஐபிஎஸ் பகிர்ந்த வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்ராணுவ வீரர் ஜெட் பேக்கில் பறந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
அயன் மேன் ஹாலிவுட் படத்தில் வரும் கதாநாயகன் உடலில் மாற்றப்பட்ட ஜெட் பேக் மூலம் வானில் பறந்து சென்று மக்களை காப்பாற்றுவார். இது முதன்முதலில் கம்ப்யூட்டர் கேம்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சூழலில் இந்த ஜெட்பேக் தற்போது உண்மையாகவே ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர் ஒருவர் கடலில் ஜெட் பேக்கை மாற்றிக்கொண்டு பறந்து கப்பலில் இறங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை குறிப்பிட்டு செங்கல்பட்டு எஸ்.பி அரவிந்தன் ஐபிஎஸ், ‘ஜெட் பேக் முதன்முதலில் கம்ப்யூட்டர் கேமில் அறிமுகப்பட்டதாக ஞாபகம். அது தற்போது உண்மையாகியுள்ளது. மனிதன் கண்டுபிடிப்பில் மற்றுமொரு ஆச்சரியம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரிட்டிஷ் கிராவிட்டி நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பவுரிணிங் ஜெட் பேக் சோதனை செய்திருந்தார். ஆடையில் ஆறு எரிவாயு கலன்களுடன் மணிக்கு 51.53 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சுமார் 100 மீட்டர் தூரத்தை கடந்து கின்னஸ் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்