'Try' பண்ணி பாப்போமே.." 50,000 ஊழியர்களுக்காக.. CEO எடுத்த அதிரடி முடிவு.. பாராட்டும் நெட்டிசன்கள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவை சேர்ந்த பிரபல உணவகம் ஒன்று, அதன் ஊழியர்களுக்காக எடுத்த முயற்சி தொடர்பான செய்தி, இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "வேலைக்கு சேர்ந்தா அங்க தான்.." 39 முறை பிரபல நிறுவனத்தில் முயற்சி... கடைசியில் வாலிபருக்கு காத்திருந்த 'சர்ப்ரைஸ்'

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ரைசிங் கேம் சிக்கன் ஃபிங்கர்ஸ் என்னும் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.

அமெரிக்கா, குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில்
இந்த உணவகத்தின் கிளைகள் உள்ளது. அங்கே சுமார் 50,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது ஊழியர்களுக்காக அந்த நிறுவனத்தின் சிஇஓ டோட் கிரேவ்ஸ் என்பவர், அசத்தலான ஐடியா ஒன்றை கையில் எடுத்துள்ளார். மெகா மில்லயின்ஸ் என்ற லாட்டரி நிறுவனத்தில், 830 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான பரிசு போட்டி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மெகா மில்லியன் லாட்டரியில் இருந்து, சுமார் 50,000 டிக்கெட்டுகளை டோட் கிரேவ்ஸ் வாங்கி உள்ளார்.

தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு பரிசு விழுந்தால், அதனை தங்களின் 50,000 ஊழியர்களுக்கும் பிரித்துக் கொடுக்க உள்ளதாகவும் டோட் கிரேவ்ஸ் தெரிவித்துள்ளார். அப்படி ஒரு வேளை, அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுகளுக்கு பரிசு கிடைத்தால், வரி மற்றும் விலக்குகள் போக, 450 மில்லியன் டாலர் வரை பரிசாக கிடைக்கும்.

அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஊழியர்களும் சுமார் 9,600 டாலர்கள் வரை பரிசாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்காக அதன் நிர்வாகி அதிகாரி டோட் கிரேவ்ஸ் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஏஜே குமரன் ஆகியோர், கடந்த சில தினங்களுக்கு முன் வெவ்வேறு எரிவாயு நிலையங்களுக்கு சென்று, லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். அது மட்டுமில்லாமல், 50,000 லாட்டரி டிக்கெட்களை வாங்குவதற்கு ஒரு டிக்கெட்டிற்கு தலா இரண்டு டாலர் வீதம், மொத்தம் ஒரு லட்சம் டாலர்களை லாட்டரி சீட்டுகளுக்காகவும் அவர்கள் செலவு செய்துள்ளனர்.

மேலும்,  50,000 லாட்டரி டிக்கெட்களை வாங்கி முடிப்பதற்கு சுமார் 8 மணி நேரம் வரையும் அவர்கள் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கி, ஒரு வேளை பரிசு கிடைத்தால், அதனை ஊழியர்களுக்கு பிரித்து கொடுக்க உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ள கருத்து, நெட்டிசன்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Also Read | ஆப்பிள் கம்பெனிக்கே அஸ்திவாரம் அதுதான்... ஏலத்துக்கு வரும் ஸ்டீவ் ஜாப்ஸின் பொக்கிஷம்.. கடும் போட்டி இருக்குமாம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

LOTTERY TICKET, CEO, CEO BUYS LOTTERY TICKET, EMPLOYEES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்