சிசிடிவி காட்சிகள்.. புதரில் கிடந்த சூட்கேஸ்.. திருமணமான அதே நாள் இரவில் நடந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில், பெண் ஒருவர் திருமணமான சில தினங்களிலேயே இறந்ததாக அவரது கணவர் புகாரளித்திருந்த நிலையில், இது தொடர்பாக விசாரித்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

சிசிடிவி காட்சிகள்.. புதரில் கிடந்த சூட்கேஸ்.. திருமணமான அதே நாள் இரவில் நடந்த அதிர்ச்சி.. திடுக்கிடும் பின்னணி!!
Advertising
>
Advertising

தாமஸ் நாட் (வயது 46) என்ற நபர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி, டான் வாக்கர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர்களின் திருமணம் முடிந்து சுமார் 4 நாட்கள் கழித்து, அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

தனது மனைவியான வாக்கரை காணவில்லை என போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார் தாமஸ். முன்னதாக, திருமணம் முடிந்த மறுநாளே தாமஸ் மற்றும் வாக்கர் ஆகியோர், ஹனிமூனுக்கு சென்றிருந்ததாகவும் போலீசில் தெரிவித்துள்ளார் தாமஸ். இதனைத் தொடர்ந்து, தாமஸ் புகாரின் பெயரில் வாக்கரையும் போலீசார் தேடி வந்துள்ளனர்.
cctv shows husband with suitcase on the day of marriage

அப்படி ஒரு சூழ்நிலையில், நான்கு நாட்கள் கழித்து, தாமஸ் மற்றும் வாக்கர் தங்கி இருந்த வீட்டிற்கு பின்னாலுள்ள புதர் ஒன்றில் கிடந்த சூட்கேஸில் டான் வாக்கர் உடல் இருந்ததை அறிந்து, போலீசார் அதிர்ந்து போயினர். இதன் பின்னர், போலீசார் இது தொடர்பாக நடத்தி வந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடைசியாக, டாக்சி டிரைவர் ஒருவர், திருமணம் முடிந்து அவர்களை வீட்டிற்கு சென்று சேர்த்த போது தான், வாக்கரை கடைசியாக பார்த்துள்ளார். அதன் பின்னர், தாமஸ் ஹனிமூன் சென்றதாக குறிப்பிட்ட சமயங்களில், வாக்கரை யாரும் பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது பற்றி, தாமஸிடம் போலீசார் விசாரித்ததில், அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

அது மட்டுமில்லாமல், திருமணமான அன்று இரவே மனைவி வாக்கரை தாமஸ் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. வாக்குவாதம் நடந்த போது, அவரை அடித்ததில் மனைவி உயிரிழந்து விட்டார் என்றும், அவரை கொலை செய்யும் நோக்கில் அப்படி செய்யவில்லை என்றும் தாமஸ் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், மனைவியை கொலை செய்து விட்டு, தனியாக ஹனிமூன் செல்வது போல கிளம்பிச் சென்ற தாமஸ், மனைவி உடலை சூட்கேஸ் ஒன்றிற்குள் வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி காட்சி ஒன்றில், தாமஸ் தனது வீட்டில் இருந்து சூட்கேஸ் ஒன்றை வெளியே கொண்டு செல்வதும் உறுதியானது. திருமணமான நாளன்றே மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், அவருடன் ஹனிமூனில் இருப்பது போல உறவினர்களை நம்ப வைத்ததும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

இத்தனை மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தாமஸ் நட்டிற்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

MARRIAGE, HUSBAND, WIFE, CCTV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்