துருக்கி நிலநடுக்கம்: காப்பாற்றியவரை விட்டு இறங்க மறுத்த பூனை.. நெகிழ வைக்கும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்துருக்கி இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பூனையை மீட்பு படை வீரர் ஒருவர் பத்திரமாக மீட்டிருக்கிறார். இந்நிலையில் அந்த வீரரை விட்டு பிரிய மறுத்து தனது பாசத்தை அந்த பூனை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | தொடரின் பாதியில்.. திடீரென நாடு திரும்பிய ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ்.. பின்னணி என்ன?
கடந்த ஆறாம் தேதி துருக்கியை புரட்டிப் போட்டது சக்தி வாய்ந்த நில நடுக்கம். ரிக்டர் அளவு கோளில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பல கட்டிடங்களை தரைமட்டமாக்கியது. அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலை நடுக்கங்கள் மொத்த நாடையும் ஸ்தம்பிக்க செய்திருக்கிறது. தொடர் அதிர்வுகள் சிரியா, லெபனான் உள்ளிட்ட அண்டை நாடுகளையும் பாதித்திருந்தது. இந்த நிலையில் துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல அண்டை நாடான சிரியாவிலும் பலி எண்ணிக்கை 5000-ஐ தொட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த சூழ்நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இந்நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவி பலரையும் நிலைகுலை செய்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பூனை குறித்த வீடியோ ஒன்று நெட்டிசன்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. பூகம்பம் ஏற்பட்டு நான்கு நாட்களில் இந்த பூனையை மீட்பு படையை வீரர்கள் பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியாததால் அதற்கு உணவு அளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் தன்னை காப்பாற்றிய வீரரை விட்டு இறங்க மறுத்து இருக்கிறது இந்த பூனை. அந்த வீரரின் தோளில் அமர்ந்தபடியே தனது பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. இது பற்றி இந்த வீரர் பேசுகையில் "பூகம்பம் ஏற்பட்டு நான்கு நாட்கள் கழித்து அந்த பூனையை மீட்டோம். அதனை தேடி யாரும் வரவில்லை. ஆகவே இந்த பூனைக்கு என்காஸ் (Enkaz) என பெயரிட்டோம். பின்னர் அதற்கு உணவு அளித்தோம். அதன் முகத்தில் பெரும் சோகத்தை என்னால் பார்க்க முடிந்தது. உரிமையாளர்கள் யாரும் வராததால் பூனையை நானே வைத்துக்கொள்ள திட்டமிட்டு இருக்கிறேன். இது என்னுடைய நினைவில் என்றும் நீங்காத தருணமாக இருக்கும்" என்றார். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பசியோட இருக்காதீங்க.. துருக்கியில் தினந்தோறும் 5000 பேருக்கு சாப்பாடு.. மக்களை நெகிழ வச்ச பிரபல Chef.. வீடியோ..!
- "இதுதான் சார் எங்க இந்தியா".. துருக்கியில் இந்திய பெண் ராணுவ அதிகாரியின் துணிச்சலான செயல்.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி..!
- பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உலக அளவில் ஏற்பட்ட பரபரப்பு..!
- "சுத்தி போடணும்யா".. 128 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட குழந்தை.. உலகையே வென்ற மழலையின் சிரிப்பு!!
- "சேவை தான் முக்கியம்".. இந்திய ராணுவ வீரரை துருக்கிக்கு அனுப்பி வைத்த கர்ப்பிணி மனைவி.. குழந்தைக்கு பெயர் தான்.. நெகிழ வச்ச தம்பதி..!
- ரூ. 247 கோடியை நன்கொடையா கொடுத்துட்டு பெயரை கூட சொல்லாம போன மர்ம மனிதர்.. திகைச்சுப்போன அதிகாரிகள்..!
- துருக்கி பூகம்பம்.. இடிபாடுகளில் சிக்கிய இளைஞர்.. உயிரை காப்பாத்திய வாட்சப் ஸ்டேட்டஸ்..!
- "கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்".. துருக்கியை புரட்டிப்போட்ட பூகம்பம்.. கவிப்பேரரசு வைரமுத்து பகிர்ந்த உருக்கமான கவிதை..!
- உருக்குலைந்த 2200 வருச பழமையான கோட்டை.. உலகையே கதிகலங்க வெச்ச நிலநடுக்கம்!!
- துருக்கியை நிலைகுலைய செய்த பூகம்பம்.. 2400 பேர் பலி.. நிவாரண பொருட்கள் & மீட்பு படையை அனுப்பும் இந்தியா.. முழு விபரம்..!