9 வருசத்துக்கு முன்னாடி காணாம போன பூனை.. "திடீர்ன்னு வந்த ஒரு போன் கால்".. இன்ப அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

9 ஆண்டுகளுக்கு முன்பு பூனை ஒன்று காணாமல் போன நிலையில், அதன் உரிமையாளருக்கு இத்தனை நாட்கள் கழித்து கிடைத்துள்ள தகவல், கடும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertising
>
Advertising

கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் சூசன் மோரே. இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஹாரியேட் என்ற பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

இதனிடையே, திடீரென அந்த பூனையும் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, சூசன் மற்றும் அவரது கணவரான பிரையன் ஆகியோர் பல இடங்களில் அதனைத் தேடியும் உள்ளனர். ஆனால், எங்கேயும் பூனை கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், ஏதேனும் விலங்கு அவர்களின் பூனையை கொன்றிருக்கலாம் என்றும் அவர்கள் கருதி உள்ளனர்.

இதற்கு மத்தியில், சுமார் 9 ஆண்டுகளும் உருண்டோடி உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சூசனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. விலங்குகள் நல அமைப்பில் இருந்து சூசனை தொடர்பு கொண்ட நபர்கள், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த அவர்களின் பூனை, இடாஹோவை அடுத்த ஹெய்ட்ன் என்னும் பகுதியில் அலைந்து திரிவதை கண்டதாக தெரிவித்துள்ளனர்.

சூசன் இருக்கும் பகுதியில் இருந்து சுமார் 1,600 கிலோ மீட்டர் தொலைவில் அந்த பூனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பூனையின் மைக்ரோ சிப் மூலம் அதன் உரிமையாளரான சூசனின் தகவலையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனை அறிந்ததும் உச்சகட்ட இன்ப அதிர்ச்சிக்கே சென்றுள்ளார் சூசன் மோரே. அந்த பூனை பேச வேண்டும் என தான் விரும்புவதாவும் அப்படி நடந்ததால் எப்படி இத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்றது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் இருந்து பிரிந்து போன பூனையை மீண்டும் தனது வீட்டிற்கே சூசன் மீட்டுக் கொண்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

CAT, MISSING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்