VIDEO : இதென்ன 'அமெரிக்கர்களுக்கு' வந்த 'சோதனை'... 'உணவுக்காக' நீண்ட வரிசையில் 'காத்திருக்கும்' சோகம்... '100 பேருக்கே உணவு..'. ஆனால், '900 பேர் காத்திருப்பு...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் உள்ள உணவு வங்கிகளில் உணவுகளை பெற மைல் கணக்கில் மக்கள் கார்களில் காத்துக்கிடக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஒமாஹா என்ற நகரில், இயங்கி வரும் உணவு வங்கியில் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட உணவுகளை வழங்கி வருகின்றனர். பேரிடர் காலங்களில் இதுபோன்ற உணவு வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் போன்றவை மூடப்பட்டு விட்டதால் பசியால் தவிக்கும் மக்களுக்கு இதுபோன்ற உணவு வங்கிகள் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது.

ஒமாஹா நகரில் உள்ள இந்த உணவு வங்கியில் உணவைப் பெறுவதற்காக சுமார் 900 பேர் கார்களில் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நிற்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. கடும் சூறாவளிகள் தாக்கியபோது கூட இவ்வளவு உணவுத் தேவை அதிகரித்ததில்லை என்று உணவு வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

100 பேர் அளவுக்கே உணவளிக்க முடியும் என்ற சூழலில் சுமார் 900 பேர் தினசரி உணவுக்காக வருவதாகவும் அந்த வங்கிகள் தெரிவிக்கின்றன. நன்கொடைகள் குறைந்துள்ளதாக கூறும் நிர்வாகிகள் கொரோனா அச்சத்தால் உணவுப் பொருட்களை பார்சல் செய்யவும், போதிய பணியாட்கள் வருவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை இவ்வளவு தேவை, பற்றாக்குறை மற்றும் பதற்றத்தை மக்களிடம் கண்டதில்லை என்றும் உணவு வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்