'அநியாயத்துக்கு ஏமாத்திட்டாங்க'... ‘அதுக்கெல்லாம் பணம் தர மாட்டேன்’... ‘கனடா பிரதமர் அறிவிப்பு’!
முகப்பு > செய்திகள் > உலகம்தரமற்ற மருத்துவப் பொருட்களை சீனா அனுப்பியதாக பல நாடுகள் குற்றஞ்சாட்டியநிலையில், தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒருபடி மேலேபோய் பணம் தரமாட்டேன் என அறிவித்துள்ளார்.
உலகையே புரட்டி போட்டு வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளுக்கு, மருத்துவ உபகரணங்களை சீனா வழங்கி வருகிறது. இந்நிலையில், சுமார் 1.1 கோடி N95 மாஸ்க்குகளை, சீனாவில் இருந்து கனடா வாங்கியுள்ளது. இதில் 10 லட்சம் மாஸ்க்குகள் மட்டுமே உரிய தரத்தில் இருப்பதாகவும், மேலும் 16 லட்சம் மாஸ்க்குகள் ஆய்வில் இருப்பதாகவும் கனடா கூறியுள்ளது. இது தவிர மீதமுள்ள சுமார் 80 லட்சம் மாஸ்க்குகள் தரமில்லாமல் இருப்பதாக கனடா குற்றஞ்சாட்டியுள்ளது.
இது முதல் முறையல்ல, கடந்த மாதமும் இதேபோல் சீனா தரமற்ற 10 லட்சம் மாஸ்க்குகளை அனுப்பிய நிலையில் மீண்டும் தரமற்ற மாஸ்க்குகளை வழங்கியது கனடா பிரதமருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. கொரோனா தடுப்பில் இருக்கும் முன்களப் பணியாளர்களான மருத்துவ துறையினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இல்லாத சீனா வழங்கிய இந்த மாஸ்க்குகளுக்கு பணம் தர முடியாது என்று ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை சீனாவுக்கு ஏற்கனவே தரமற்று இருந்த மருத்துவ உபகரணங்களை திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கிராம மக்களுக்கு எங்க சேவை ரொம்ப தேவையா இருக்கு... அதனால தான இப்பவும் நான் வர்றேன்... 9 மாத கர்ப்பிணி செவிலியரின் நெகிழ்ச்சி செயல்
- சென்னையில் முதல்முறையாக 'கட்டுப்படுத்தப்பட்ட' பகுதியாக மாறியுள்ள 'ரயில்' நிலையம்... ஊரடங்கு தளர்வுக்கு பின்னும் 'இங்கு' ரயில்சேவை செயல்படாது...
- "அதெப்படி என்ன பாத்து அப்படி சொன்னீங்க?".. 'மல்லுக்கட்டிய 'பெண் நிரூபர்'!.. 'சூடான' டிரம்ப் 'பிரஸ் மீட்டில்' செய்த 'காரியம்'!
- 'கொரோனாவால்' உலகின் 'பணக்கார' கோயிலுக்கே 'இந்த நிலையா'? ... 'இதையே நம்பி இருந்த' ஊழியர்கள் 'திணறிவரும்' அவலம்!
- "ஆலையை திறக்கலாம்.. ஆனால் அதே சமயம்.." - ஆதரவு கொடுத்த டிரம்ப்!.. “நன்றி மகராசா!” - நெகிழும் எலன் மஸ்க்!
- 'அதிவேகத்தில் தினமும் எகிறும் பாதிப்பு'... 'நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரோனா'... 'நிலைகுலையும் வல்லரசு நாடுகள்'!
- 'தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய 3-வது மாவட்டம்’...
- லேசான 'கொரோனா' அறிகுறி இருந்தா... வீட்டுல இருந்து இதை 'மட்டும்' செய்ங்க... மறுபடியும் 'பரிசோதனை' தேவையில்லை!
- இந்தியா இல்லன்னா 'இதை'... நெனைச்சு கூட 'பார்க்க' முடியாது... உலக சுகாதார நிறுவனம் 'எச்சரிக்கை'
- அவ்ளோ 'சீக்கிரம்' விடாது போல... 'பிறப்பிடமான' வுஹான் நகரில்... மீண்டும் 'தலைதூக்கிய' கொரோனா!