VIDEO: அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடந்த 'ஓர்பால் ஈர்ப்பு' திருமணம்...! - தமிழ் முறைப்படி 'தாலிகட்டி' கொண்டாட்டம்...! - கொந்தளித்த நெட்டிசன்கள...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாரம்பரியமான சடங்குகளுடன் ஐயர் முன்னிலையில் தாலி கட்டி இரண்டு பெண்கள் திருமணம் செய்துக்கொண்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

VIDEO: அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடந்த 'ஓர்பால் ஈர்ப்பு' திருமணம்...! - தமிழ் முறைப்படி 'தாலிகட்டி' கொண்டாட்டம்...! - கொந்தளித்த நெட்டிசன்கள...!

கனடாவில் உள்ள இரு தமிழ் பெண்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, தாலிகட்டிக்கொண்டனர். ஓர்பால் ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்ய கனடாவில் தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CANADA two tamil girls getting married traditional rituals

இந்த சம்பவத்திற்கு பிற்போக்கு கலாச்சாரவாதிகள் பலர் கொந்தளித்து வருகின்றனர். இது இயற்கைக்கு முரணானது என்றும். இப்படி பெண்கள் திருமணம் செய்துக் கொண்டால் குழந்தை எப்படி பெற்றுக் கொள்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் இது உலகம் அழிவதற்கான அறிகுறி என்றும் கூறத் தொடங்கிவிட்டனர்.

அதற்கு பதிலடியாக ஓர்பால் ஈர்ப்பு என்பது இருபால் ஈர்ப்பு போன்று இயல்பானது என மருத்துவம் கூறும் அறிவியல் விளக்கத்தையும், இனப்பெருக்கத்திற்காக மட்டுமே இருபால் கலாச்சாரத்தை காலம்காலமாக பின்பற்றி வந்ததாகவும் விளக்கம் அளித்தனர். மேலும், அவர்களுக்கு பிடித்த வாழ்வை வாழ முழு உரிமையும் அவர்களுக்கு உள்ளது எனவும், அதைக் கேள்விக் கேட்க யாருக்கும் உரிமையை கிடையாது எனவும் பதிலடி கொடுத்துள்ளனர்.

இங்கு உருவாகி நீடித்திருக்கும் கலாச்சாரம் பழமையானது என்பதால், புதிதாக வரும் மாறுதல்களுக்கு அதிர்ச்சியடைவது இயல்பு தான். ஆனால் தற்போது புழக்கத்தில் இருக்கும் கலாச்சாரமே ஒரு காலத்தில் அதிர்ச்சிக்கு உள்ளானவை தான். எதுவுமே மாறிக் கொண்டிருக்கும் பட்சத்தில் இப்படியான ஒரு சம்பவம் மானுட சமத்துவத்தை விரும்புகிறவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் கனடா நாட்டின் Grafton பகுதியில் கடந்த 26-ஆம் தேதி நடந்ததாக தெரிய வந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்