“வேண்டிக்கிட்ட எல்லாத்துக்கும் இதயப்பூர்வ நன்றி!”.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவிக்கு நடந்த அந்த மேஜிக்!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனாவால் தாக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ குணமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகையே தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்கவைத்துள்ளது கொரோனா எனும் கொடிய நோய். இந்த நோய் யாரைத் தாக்கும் யாரை விட்டுவிடும் என்பதெல்லாம் இன்னும் துல்லியமாக கணக்கிடப்படமுடியாத சூழலில் இருக்கும் போது உலக நாடுகள் இந்நோய்க்கான மருந்தை தீவிரமாக கண்டிபிடிக்க முயற்சி செய்கின்றன.

இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி ட்ரூடோ, லண்டன் சென்றுவிட்டு திரும்பியபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். ஜஸ்டின் ட்ரூடோவோ, மனைவியிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தான் பரிபூரணமாக குணமடைந்துவிட்டதாக மருத்துவரும், ஒட்டாவா பொது சுகாதாரத் துறையும் தெரிவித்துள்ளதாக சோபி தனது சமூக வலைதளங்களில் தான் உடல்நலத்துடன் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் தான் பரிபூரணமாக குணமாக வேண்டி வாழ்த்தி, பிரார்த்தித்த நல்ல உள்ளங்களுக்கு தனது இதயப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்டு இருத்தல் என்பது மிகவும் சவாலான காலம் என்றும், அவ்வாறு இருப்பது அவ்வளவு எளிதானதல்ல என்றும், தன்னையும் சேர்த்து நாம் எல்லோரும் சமூக விலங்கு என்றும் கூறியவர், இந்த காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் விதமாக கொரோனா வைரஸை எதிர்த்து போரிடுவதை பார்க்க முடிகிறது என்று நெகிழ்வதோடு, சமூக வலைதளங்கள் மூலம் அன்புக்குரியர்களுடன் தொடர்பில் இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். 

CORONA, CORONAVIRUS, LOCKDOWN, CANADA, SOPHIEGREGOIRETRUDEAU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்