'இந்தா வந்துட்டார்ல'... "நிறவெறிக்கு எதிரான பேரணி!".. துவங்கிவைத்த பிரதமர் செய்த ஆச்சர்யம்.. வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நிறவெறிக்கு எதிராக கனடாவில் நடந்த போராட்டத்தில் அந்நாட்டுப் பிரதமர் பங்கேற்றுள்ளார்.

Advertising
Advertising

அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டு என்பவரின் மரணத்திற்காக அமெரிக்காவே போராட்ட களத்தில் குதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு கனடா பிரதமர் தமது நாட்டில் அஞ்சலி செலுத்தியதோடு தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்.

அந்தப் பேரணி நடந்து கொண்டிருக்கும் போது எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென பேரணியில் இணைந்து நடந்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவருடன் சோமாலிய வம்சாவளி அமைச்சரான அகமது உசேனும் பங்கேற்றார். அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜஸ்டின் ட்ரூடோ முழங்காலிட்டு மௌன அஞ்சலி செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்