"அவங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க எப்போவும் கூட நிப்போம்..." 'இந்திய' விவசாயிகளுக்கு ஆதரவாக 'குரல்' கொடுத்த 'கனடா' பிரதமர்!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஆறு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரவு பகல் பாராமல், விவசாயிகளால் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய குழுவை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை அழைப்பை விவசாயிகள் குழு நிராகரித்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதனையடுத்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக குருநானக் ஜெயந்தி தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின்,'இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அங்குள்ள நிலைமை கவலையளிக்கும் வகையில் உள்ளது. அமைதியான முறையில் போராடும் விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும்.

விவசாயிகளின் போராட்டம் குறித்த எங்கள் கவலைகளை இந்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். விவசாயிகளின் போராட்டத்தைக் கவனிக்காவிட்டால் நான் கடமை தவறியவன் ஆவேன்' என ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்