'கனடா பிரதமர் ஜஸ்டினுக்கு... 8 வயது சிறுவனின் உருக்கமான கடிதம்!'... இதயங்களை வென்ற பிரதமரின் பதில்... என்ன கேட்டார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எட்டு வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் ஒன்றுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

டேவிட் கெல்லர்மேன் என்பவர் ஒரு கடிதத்தை கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ளார். அந்த கடிதத்தை எழுதியது, டேவிட்டின் 8 வயது மகன் மைக்கெல் ஆவார்.

அந்தச் சிறுவன் தனது கடிதத்தில், "உங்களது மனைவி நலமாக இருப்பதாக நான் நம்புகிறேன். அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். அது உங்களிடம் வருவதை நான் விரும்பவில்லை" என்று எழுதியுள்ளான்.

மேலும், "இது எனது தாத்தா, பாட்டி யாரிடமிருந்தும் கிடைப்பதை நான் விரும்பவில்லை. அனைத்துவகையான கடின உழைப்புக்கும் நன்றி. தயவு செய்து பதில் எழுதுங்கள்" என நீண்டு செல்கிறது அந்தக் கடிதம்.

கொரோனா தொற்று கனடாவை அச்சுறுத்தி வரும் இந்தக் கடுமையான சூழலிலும் ட்ரூடோ தனது அன்றாட பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி சிறுவனின் தனிப்பட்ட கடிதத்திற்கு ட்வீட் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உங்கள் கடிதத்திற்கு நன்றி மைக்கேல். சோஃபி (பிரதமரின் மனைவி) நன்றாக இருக்கிறார். நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா பரவலைக் குறைப்பதற்கும் மேலும் தாத்தா, பாட்டி மற்றும் அனைத்து மக்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். இந்தப் பணியில், நாடு முழுவதும் உள்ள ஏராளமான மருத்துவ வல்லுநர்கள் தங்களது அறப்பணியை செய்து வருகின்றனர்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம், சமூக வலைதள வாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, கனட பிரதமரின் அரவணைப்பையும் வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளது.

 

 

CANADA, JUSTIN, CORONAVIRUS, LETTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்