'வெளிய தல காட்ட முடியல'!.. தேர்தல் பிரச்சாரத்தில்... கல் அடி பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!.. கொந்தளிக்கும் கனடா மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல் வீசி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் அறிவித்தார்.
இதையடுத்து, வரும் 20ம் தேதி கனடாவில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் ஒன்டாரியோ மாகாணத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், பிரச்சாரம் நடைபெற இருந்த இடத்தில் போராட்டக்காரர்கள் திரண்டு அவருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஜஸ்டின் ட்ரூடோ தனது பரப்புரையை ரத்து செய்து விட்டு திரும்பிச் சென்றார். இந்த நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தனது வேனில் ஏறிய போது அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் கற்களையும், குப்பைகளையும் அவர் மீது வீசினர்.
அதில் சில கற்கள் ஜஸ்டின் ட்ரூடோவின் தோள்பட்டையில் விழுந்தன. இதைத் தொடர்ந்து, அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.
எனினும், இந்த கல்வீச்சில் அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகராம் தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை முன்னெடுக்க உள்ளனர்.
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக, தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை கனடாவில் கொண்டாடப்பட்ட போது, அவர் வேட்டி சட்டை உடுத்தி சிலம்பாட்டம் ஆடிய சம்பவம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆளுக்கு 2 சூட்கேஸ தூக்கிட்டு... தெறித்து ஓடும் 3 வெளிநாட்டவர்கள்'!.. 'கண்டிப்பா நீங்க நினைக்கிறது அதுல இல்ல'!.. பகீர் பின்னணி!
- சுற்றி வளைத்த தாலிபான்கள்!.. தப்புவதற்காக அசுர வேகத்தில் பறந்த ஆப்கான் விமானப்படை!.. கண்ண மூடி தொறந்து பார்த்தா... 'அய்யோ'!
- 'இன்னும் கொஞ்ச நேரத்துல பாம் வெடிச்சிடும்'!.. 'இறுதி நொடியில் கனடா எடுத்த அவசர முடிவு'!.. இனி காபூலில் 'அவங்க' நிலைமை அவ்ளோ தான்!!
- 'தடுப்பூசி விவரங்கள பாஸ்போர்ட்ல ஏன் சேர்க்கணும்?.. உள்ளடி அரசியலா'?.. போராட்டத்தில் குதித்த மக்கள்!.. திடுக்கிடும் பின்னணி!
- 'அந்த பிளாஸ்டிக் கவரை கொஞ்சம் கிழிங்க'... 'அட பாவிகளா இதையா கடத்தி வந்தீங்க'... வெலவெலத்து போன அதிகாரிகள்!
- 'இந்த நாட்டுக்கு போற பிளான் இருக்கா'?... 'செப்டம்பர் வரை இந்தியர்கள் வர தடை'... அதிரடி அறிவிப்பு!
- H1B விசா விவகாரம்!.. தனக்குத் தானே குழி வெட்டி படுத்துக் கொண்ட அமெரிக்கா!.. இந்தியர்களின் சாய்ஸ் இனிமே 'இது' தான்!
- '2024 டார்கெட்'!.. "பாஜகவுக்கு எதிராக கூட்டணியில்... 'அவங்க' இல்லாம எப்படி"?.. வியூகம் அமைத்து காய் நகர்த்தும் சரத் பவார்!
- 'மோடியை வீழ்த்த வியூகம்!.. 15 எதிர்க்கட்சிகள் இணைந்த மாபெரும் அணி'!?.. அவசர அவசரமாக மீட்டிங் ஏற்பாடு செய்த சரத் பவார்!
- ‘அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்கள்’!.. இந்த தேர்தலில் இத்தனை பேர் தோல்வியா.. வெளியான விவரம்..!