காபி குடிச்சுட்டு இருந்தப்போ வந்த மெயில்.. "ஓப்பன் பண்ண மனுஷன் வாழ்க்கை அடுத்த நிமிஷமே மாறிடுச்சு"..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சிலரது வாழ்க்கையில் எப்போது என்ன திருப்புமுனை நிகழும் என்பதையே கணிக்க முடியாது. யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில், நமது வாழ்க்கையே தலை கீழாக திருப்பி போடும் சம்பவங்கள் அரங்கேறும்.

Advertising
>
Advertising

அப்படி நமது வாழ்வையே திருப்பும் சம்பவங்கள் எப்போது நடைபெறும் என்பதே தெரியாது. அந்த வகையில், கனடாவை சேர்ந்த நபர் காபி குடித்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம், அவருக்கு உச்சகட்ட இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கனடாவின் Oakville என்னும் பகுதியைச் சேர்ந்தவர் Richard Noronha. இவருக்கு தற்போது 51 வயதாகிறது. மேலும் சுகாதார துறையிலும் ரிச்சர்ட் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தனது வீட்டில் இருந்த ரிச்சர்ட், காபி குடித்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில், ரிச்சர்டிற்கு இ மெயில் ஒன்று வந்துள்ளது. காபி குடித்த படி, அதனை திறந்து பார்த்த ரிச்சர்ட், அப்படியே ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் உறைந்து போனார். இதற்கு காரணம், லாட்டரி நிறுவனம் ஒன்றில் இருந்து வந்த அந்த மெயிலில், 1,29,754 டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 79 லட்ச ரூபாய்க்கு மேல்) ரிச்சர்ட் வென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் பற்றி பேசும் ரிச்சர்ட், இத்தனை பெரிய தொகை தனக்கு லாட்டரியில் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், பரிசு பணத்தை கொண்டு தானும், தனது மனைவியும் சேர்ந்து தொண்டு நிறுவனத்திற்கு பெரிய அளவில் நன்கொடை கொடுக்க திட்டம் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு லாட்டரியில் பணம் கிடைத்ததை கொண்டாடும் விதமாக, தனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு நல்ல இரவு நேர விருந்து அளிக்க உள்ளதாகவும் ரிச்சர்ட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காபி குடிக்கும் நேரத்தில் வந்த மெயிலால், ஒருவரின் வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

CANADA, LOTTERY, COFFEE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்