"இன்னும் 48 மணி நேரம் தான் உயிரோட இருப்பீங்க.." சோகத்தில் ஆழ்ந்த இளைஞர்.. கடைசி நேரத்தில் மனம் உருக வைத்த 'சர்ப்ரைஸ்'!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவில் 35 வயதான நபர் ஒருவர், இனிமேல் 48 மணி நேரம் தான் உயிர் வாழ்வார் என மருத்துவர் தெரிவித்த நிலையில், வாலிபர் மறைவதற்கு முன்பாக நடந்த சம்பவம் ஒன்று பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஆண்மை குன்றியவர் என்பதை மறைத்து.. 200 பவுன் நகை வாங்கி திருமணம்.. பெண் அளித்த புகார்.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

நோவா ஸ்கோடியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பில்லி பர்கோயின். 35 வயதான பில்லி, கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயின் மூலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இடையில் பில்லிக்கு புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், பின்னர் மீண்டும் ஒரு வருடத்திற்கு முன்பாக, பாதிப்பு அவருக்கு அதிகரித்துள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வழக்கம்போல மருத்துவமனைக்கும் பில்லி சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் அவரிடம் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். புற்றுநோயுடன் உங்களின் நீண்ட போராட்டம் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது என்றும், ஏனென்றால் நீங்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு மட்டுமே உயிர் வாழ்வீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டதும், பில்லி  மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல், பில்லியை 17 ஆண்டுகளாக காதலித்து வந்த நிகிதாவும் காதலனின் நிலை எண்ணி கதறி துடித்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில் மனதை உருக வைக்க ஒரு முடிவையும் பில்லியின் காதலியான நிகிதா மஹர்  எடுத்துள்ளார். 17 ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலன் பில்லியை மணமுடிக்கவும் முடிவு செய்துள்ளார்.

இன்னும் ஒரு சில நாட்கள் இருக்க போகும் பில்லியை அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நிகிதா திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் முடிந்து சுமார் நான்கு நாட்கள் வரை உயிரோடு இருந்த பில், கடந்த வாரம் உயிரிழந்தார்.

இது தொடர்பாக, பில்லியின் காதலியும், மனைவியுமான நிகிதா பேசுகையில், "எங்களின் திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டம் காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது. பில்லிக்கு மீன் பிடிப்பதிலும், விளையாட்டிலும் அதிக ஆர்வம் இருந்தது. எங்களது திருமணம் முடிந்த அதே நாளில், மாலை நேரத்தில் கடைசியாக மீன்பிடிக்கவும் பில் சென்றிருந்தார்.

முன்னதாக, எங்களின் திருமணத்தின் போது எழுந்து நின்று அவரால் முத்தம் கூட கொடுக்க முடியவில்லை. கால்கள் செயலிழந்த நிலையில் அவர் இருந்தது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அப்படி இருந்த போதும், எழுந்து எனக்கு கடைசி முத்தமும் தந்தார். வில்லி பற்றிய நினைவு என்றும் என் மனதில் மறையாது இருக்கும்" என உருக்கத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காதலன் இறக்கப் போவது தெரிந்த பிறகும், அவரை திருமணம் செய்து கொண்டு அவரின் நினைவுகளுடன் வாழ்வதாக காதலி குறிப்பிட்டுள்ள தகவல், பலரையும் மனமுடைய செய்துள்ளது.

Also Read | "நாலு வாரமா வாடகை தரல.." சகோதரிகள் வீட்டின் கதவை திறந்ததும் வந்த துர்நாற்றம்.. ஒரு மாசமா தொடரும் 'மர்மம்'!!

CANADA, MAN, GIRLFRIEND, MARRIED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்