டிவி பாத்துட்டு இருந்த குடும்பம்.. "கீழ இருந்த டேபிள உத்து பாத்தப்போ.." அதுல ஒருத்தர் கவனிச்ச விஷயம்.. "இது எப்படி இங்கன்னு எல்லாரும் ஆடி போய்ட்டாங்க.."

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த காலத்தில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்து வருகிறதோ, அதே அளவுக்கு ஒருவரின் பிரைவசிக்கான இடமும் குறைந்த வண்ணம் இருப்பதாகவும் பலர் கருதுகின்றனர்.

Advertising
>
Advertising

வீட்டை விட்டு வெளியே எங்கேயாவது சென்று தங்கும் போது, அவர்களின் பிரைவசி ஒன்று, கேள்விக்குறியாக இருப்பதாக சிலர் உணர்கின்றனர்.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் கனடாவில் ஒரு குடும்பத்திற்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்றால், மிகப்பெரிய பிரபல நிறுவனம் ஒன்று சர்ச்சையில் சிக்கி உள்ளது.

ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், அறைகள் உள்ளிட்ட இடங்களை வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் பிரபல நிறுவனமான Airbnb, உலகிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. ஒரு சில நாட்களுக்கு தங்கும் இடமாக இருந்தாலும், சில மாதங்கள் தங்கிக் கொள்ளும் இடமாக இருந்தாலும், பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில், இந்த இடங்களை நிறுவனத்தின் மூலம் இருந்து வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

அந்த வகையில், கனடாவின் பிராம்ப்டன் என்னும் பகுதியில், Airbnb மூலம், ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். ஜாஸ் என்பவர், தனது உறவினர்கள் சிலருடன் தங்கி வந்துள்ளார். அப்போது, அவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென டிவியின் கீழ் இருந்த மேஜையில், ஜாஸ் உற்று பார்த்துள்ள நிலையில், கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்தது.

அதன் ஒரு கேபினட்டுக்குள் ஓட்டை இருந்த நிலையில், அதற்குள் கேமரா லென்ஸ் ஒன்று இருப்பது தெரிய வந்தது. வீட்டிற்குள் Hidden கேமரா இருப்பதை புகைப்படமாக எடுத்து, அந்த நபர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பதிலுக்கு நிறுவனம் தெரிவித்த அறிக்கையின் படி, வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்புக்காக கேமராக்கள் வைக்கப்படுவது என்பது விதியில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக பேசும் ஜாஸ், வீட்டிற்குள் கேமரா வைப்பது எப்படி எங்களின் பாதுகாப்பாக இருக்கும் என்றும், அப்படி இருந்தது ஏன் என்பது புரியவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, Airbnb நிறுவனம் அளித்த விளக்கத்தில், வீடுகளில் உள்ள கேமராக்கள் குறித்து தெளிவான விளக்கம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ஆனாலும் வாடிக்கையாளரின் தனி உரிமையை மதிப்பதாகவும், இது தொடர்பாக தீவிர நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதே போல, சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு முழு பணத்தையும் திருப்பித் தர உத்தரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

CAMERA, FAMILY, TV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்