'இந்த நாட்டுக்கு போற பிளான் இருக்கா'?... 'செப்டம்பர் வரை இந்தியர்கள் வர தடை'... அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா பரவல் விமானச் சேவையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. மற்ற நாடுகளைப் பொறுத்தவரை இன்னும் அதன் முழுமையான பாதிப்பிலிருந்து விடுபடவில்லை. இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என  அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடும் இந்தியாவிலிருந்து வருபவர்கள் தங்களைக் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. மேலும் இந்தியப் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்குச் செப்டம்பர் 21-ம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்