'ஏரியா'ல லாக்டவுன் போட்ருக்காங்க... இப்போ எப்படி வெளிய போறது??..." 'பெண்' செய்த 'காரியம்'... "ஆத்தி என்ன இப்டி எல்லாம் யோசிக்குறாங்க??!!"
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவின் கியூபெக் (Quebec) என்னும் பகுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அப்பகுதியில் இரவு 8 மணியில் இருந்து மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் வெளியே நடமாடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதே போல தங்களின் இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் தங்களது நாயை வெளியே அழைத்துச் செல்ல மட்டும் தளர்வும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் இரவு 9 மணியளவில் தனது கணவரை நாய் கட்ட பயன்படுத்தப்படும் வார் ஒன்றை பயன்படுத்தி கட்டிப் போட்டு நாயைப் போல வெளியே அழைத்துச் சென்றுள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய அந்த பெண்ணை அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அழைத்து விசாரித்தனர்.
அதற்கு பதிலளித்த அந்த பெண், தான் ஊரடங்கு விதிகளை மீறவில்லை என்றும், நாயை அழைத்துச் செல்ல தளர்வுகள் உள்ளது என்றும் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், உங்கள் கணவர் நாயில்லை என போலீசார் கூறியும், அந்த பெண் ஒத்துழைக்காமல் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இறுதியில், இருவருக்கும் சேர்த்து 3000 டாலர்களை அபராதமாக விதித்தனர்.
கொரோனா விதிகளை மீறாமல் இருக்கத் தனது கணவரையே நாயாக மாறச் செய்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '1918-ல் பூட்டியார் எழுதிய கடிதம்!'... 'அலமாரியில் இருந்து பிரித்து பார்த்த பேத்திக்கு காத்திருந்த ஆச்சரியம்!'.. ‘கண்கலங்க வைத்த நிகழ்வு!’
- திரையரங்குகளில் பார்வையாளர்கள் அளவு கட்டுப்பாட்டு விவகாரம்!.. 'முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்னாச்சு?'
- ரசிகர்களின் அபிமான ‘ஹீரோக்களின்’ படங்கள் ரிலீஸ்.. '100% தளர்வுடன் திரையரங்குகள் இயங்குமா?'.. அமைச்சர் கூறிய முக்கிய தகவல்?
- இவங்களாலாம் எப்படி மறக்க முடியும்...! எல்லாரும் இப்போ எப்படி இருக்காங்க...? - ஊரடங்கில் துயரப்பட்டவர்களின் தற்போதைய நிலை...!
- "அவங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க எப்போவும் கூட நிப்போம்..." 'இந்திய' விவசாயிகளுக்கு ஆதரவாக 'குரல்' கொடுத்த 'கனடா' பிரதமர்!!!
- “இப்படியே போனா வேலைக்கு ஆகாது... போடுறா லாக்டவுன!”... டிசம்பர் வரை ஊரடங்கு நீட்டிப்பை ‘அதிரடியாக’ அறிவித்த ‘அதிபர்!’
- 'கோயம்புத்தூர்' ரோட்டுல படுத்து, குப்ப தொட்டி மிச்சம் மீதி சாப்பாட்டைச் சாப்பிட்டவன்'... 'ஆனா இன்னைக்கு பெரிய கோடீஸ்வரர்'... அதெல்லாம் மறக்க முடியுமா?
- “வேற லெவல் பா இவங்க!”.. ‘விபரீதத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளம் பெண்களை கண்டதும், சீக்கியர்கள் செய்த ‘மனதை உருக்கும்’ காரியம்!
- "நமக்கெல்லாம் நல்லது நடக்குமா?!".. 'கதவைத் தட்டிய' அதிர்ஷ்டத்தை 'அவநம்பிக்கையால்' காக்க வைத்த தம்பதி!.. கடைசியில் 'இன்ப அதிர்ச்சி கொடுத்த' ஜாக்பாட்!!
- "ஸ்டார்ட் ஆயிடுச்சு.. இது அதுதான்!".. கொரோனா தாக்கம் குறித்த முக்கிய எச்சரிக்கை விடுத்த கனடா சுகாதார இயக்குநர்!