"அதான் எனக்கு காய்ச்சல் இல்லையே..." "சளியும் இல்லை..." 'குணமடைந்தாலும் சரி...' 'அவசியம் இதை கடைப்பிடிக்க வேண்டும்...' 'புதிய ஆய்வில்' வெளியான 'பகீர் தகவல்'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதித்தவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் அனைத்தும் நீங்கிய பிறகும் வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், குணமடைந்தவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என புதிய ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சீன ராணுவ மருத்துவமனையில் ஜனவரி 28ஆம் தேதி முதல் ஃபிப்ரவரி 19ஆம் தேதி வரை சிகிச்சை பெற்ற 19 பேரை சீன மற்றும அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் முதல் 5 நாட்களுக்கு கடுமையான காய்ச்சல், தொண்டடை வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவற்றால் சிரமப்பட்டனர். 8 நாட்களுக்குப் பிறகு அவர்கள் படிப்படியாக குணமடைந்தனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட 2 சோதனைகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று நீங்கிவிட்டதாக முடிவு வந்தது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டன.
அனால் அறிகுறிகள் முற்றிலும் நீங்கிய பிறகும் அவர்கள் அடுத்த 8 நாட்களுக்கு வைரசை பரப்பக்கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ அறிவியல் பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வு முடிவின்படி, கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கி குணமடைந்த பின்னரும் வைரஸ் முற்றாக நீங்குவதற்கு கால அவகாசம் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவு இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட வேண்டியது மிக அவசியம் என்பதால், பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுவதை தீவிரப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- BREAKING: 'தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி!'... பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!!... முதலமைச்சர் பரபரப்பு பேட்டி!
- ‘கொரோனாவுக்கு பலி!’.. ‘புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரின் மரணத்தால் கலங்கிய ரசிகர்கள்!’.. ‘இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்!’.. ஜப்பானில் சோகம்!
- கோவையில் '10 மாத குழந்தைக்கு கொரோனா வந்தது எப்படி?'... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
- 'உலகமே கொரோனா பீதியில்...' 'ஆனா...' 'எங்க தலைக்கு தில்ல பாத்திங்களா?...' 'வட கொரியா வைலண்ட்...' 'அமெரிக்கா சைலண்ட்...'
- "நாம் கேள்விப்படுவது 20%க்கும் குறைவே..." "இதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய சவால்..." 'வல்லுநரின் அதிர்ச்சித் தகவல்...'
- 'சீனா இத மட்டும் பண்ணிருந்தா?...'இறால் விற்ற பெண்ணுக்கு வந்த சளி'...கொரோனாவின் முதல் டார்கெட்!
- 'ஐயோ என் நாடு இப்படி போகுதே'... 'துரத்திய மனஅழுத்தம்'...ஜெர்மனியை புரட்டி போட்டுள்ள சோகம்!
- 'புதைக்க' இடமில்லாமல் குவியும் 'சவப்பெட்டிகள்'... துடைத்து எடுக்கும் 'துயரம்'... 'இத்தாலியில்' இருந்து கற்க வேண்டிய பாடம் இதுதான்!
- ‘சென்னையில் கொரோனா பாதித்த 15 பேர் எந்தெந்த ஏரியாவில் வசிக்கிறார்கள்?’ வெளியானது பட்டியல்!
- ‘எப்போ கொறையும்? எப்போ முடியும்?!’.. ‘கொரோனா-வை முன்பே கணித்த ஜோதிட சிறுவனின் ’வைரல்’ பதில்கள்’!