'இந்த விளம்பரங்களை கண்ணு கொண்டு பாக்க முடியல'... 'உடனே நிறுத்துங்க'... தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களுக்கு எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆணோ, பெண்ணோ உள்ளாடை அணிந்திருப்பது போன்ற விளம்பரங்கள் சமூகத்தைப் பாதிக்கும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் ஷாப்பிங் நிகழ்ச்சிகளில் உள்ளாடைகளைக் காண்பிக்கக் கூடாது என்று உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களுக்கு எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவின், இரண்டு உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களுக்கு, அவர்களது நிகழ்ச்சிகளில் உள்ளாடை விளம்பரங்கள் ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு திரைப்பட தணிக்கை ஆணையம் (LPF) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான எழுத்துப் பூர்வமான உத்தரவைத் திரைப்பட தணிக்கை ஆணையம் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் ''ஆணோ, பெண்ணோ - மனிதர்கள் உள்ளாடை அணிந்திருப்பது போன்ற காட்சிகள் அல்லது விளம்பரங்கள் சமூகத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக'' கூறப்பட்டுள்ளது.

மலேசியாவின் பலதரப்பட்ட சமயம் மற்றும் சமுதாயத்தை மதித்து, நாகரிகமாக நடந்து கொள்வது முக்கியம் என்று தணிக்கை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, உள்ளாடை விளம்பரங்களை நிகழ்ச்சிகளிலிருந்து உடனே அகற்றுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்