'தம்' அடிப்பவர்களை 'கொரோனா' தொற்றுமா? 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன?'... 'ஷாக் ரிப்போர்ட்?...'
முகப்பு > செய்திகள் > உலகம்புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புகை பிடிக்காதவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு கொரோனாபாதிப்பு விரைவில் தீவிரமாகி விடுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் ஏற்கெனவே அந்த பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் புதிதாக உள்ளே செல்லும் கொரோனா வைரஸ் நுரையீரலை விரைந்து பாதிப்படையச் செய்கிறது. மேலும் புகைப்பழக்கம் உடையவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களால் கொரோனாவை எதிர்த்து போராட முடிவதில்லை.
சீனாவிலிருந்து வந்த ஆய்வறிக்கை ஒன்றில் புகைப்பழக்கம் உடையவர்கள் கொரோனா பாதிப்பால் விரைவில் மரணம் அடைந்தது தெரியவந்துள்ளது.
கடந்த ஃபிப்ரவரியில் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் என்ற பத்திரிகையில் வெளியான ஆய்வறிக்கையில் சீனாவில் COVID-19 நோயாளிகள் 1,099 நோயாளிகளைப் பார்த்ததில் அதில் 173 நோயாளிகளுக்கு கடுமையான கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது , அவர்களில் 16.9% பேர் தற்போதைய புகைப்பிடிப்பவர்கள் மற்றும் 5.2% பேர் முன்பு புகைபிடிப்பவர்களாக இருந்து உள்ளனர் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன .இதில் 11.8சதவீதம் பேர் மட்டுமே குறைவான அறிகுறிகளையும், 1.3 சதவீதம் பேர் முன்னாள் புகைப்பிடிப்பவர்களாக குறைந்த நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர்.
இதில் புகைப்பழக்கம் உடையவர்கள் தீவிர பாதிப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து செயற்கை சுவாசம் அளித்த பிறகும் கூட 25.5 சதவீதம் பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு 2 மடங்கு அதிகமாக உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.
மேலும், தென்கொரியாவில் மெர்ஸ் ஆய்வு நிறுவனம் ஒன்று புகைபிடிப்பவர்களுக்கு DPP4எனப்படும் புரதத்தின் அளவு அதிகமாக இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புரதம் கொரோனா வைரஸை உள்ளே சுவாச பாதைக்குள் செல்ல எளிதாக அனுமதித்து விடுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செல்களில் உள்ள ACE2 ஏற்பி இந்த கொரோனா வைரஸால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் நுரையீரலில் உள்ள உயிரணுக்கள் செல்கள் சீக்கிரமே அழியத் தொடங்கி விடுகிறது. இதனால் அவர்களுக்கு தீவிர பாதிப்பு உண்டாகிறது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் மூச்சுக்குழாயில் உள்ள சிலியா என்ற சிறுசிறு முடி போன்ற அமைப்பு நுரையீரலுக்குள் தொற்று மற்றும் தூசிகளை செல்ல விடாமல் தடுக்கும் தன்மை கொண்டது. இந்த அமைப்பு புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு சிதைந்து போவதால் எளிதில் தொற்று ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது.
இதுபோன்ற பல காரணங்களால் புகைப்பழக்கம் உள்ளவர்கள் மீள முடியாத நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்க ஊருல வைரஸ் பாதிப்பில்ல', 'ஆனா வைரஸோட பேரு தான் பிரச்சனை' ... கொரோனா என்னும் பெயரால் தவிக்கும் கிராம மக்கள்!
- '60 மிலி மது வித் சோடா'.. 'குறிப்பா ஈவ்னிங் டயத்துல வறுத்த முந்திரி!'.. வைரலான மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டு!!
- 'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி!'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்!... என்ன நடந்தது?
- '1 லட்சத்துக்கு மேல் பாதிப்பு'...'சுகாதார நிபுணர்களின் ரிப்போர்ட்'... முதல் முறையா அச்சப்பட்ட 'டிரம்ப்'!
- சென்னையின் 'இந்த' 9 இடங்களில் இருந்து ... கண்காணிப்பு 'வளையத்தில்' கொண்டு வரப்பட்ட... 'ஒன்றரை லட்சம்' வீடுகள்!
- ‘ஊரடங்கால்’ தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்க கூடாது! மத்திய உள்துறை அமைச்சகம்!
- 'பொழுதுபோகலனு யாரும் இனி புலம்ப தேவையில்லை!'... வண்டலூர் உயிரியல் பூங்காவின் அசத்தல் திட்டம்... பொதுமக்கள் அமோக வரவேற்பு!
- ‘அந்நிய தேசத்தில் நுழைவது போல இருக்கு’... ‘வுஹான் நகருக்கு திரும்பும் மக்கள்’... ‘ஆனாலும், சில கட்டுப்பாடுகள்’!
- "அடுத்த சுற்று தாக்குதல் பயங்கரமாக இருக்கும்..." "எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும்..." 'பிரபல' மருந்து நிறுவன 'சிஇஓ எச்சரிக்கை'...
- ‘வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க’.. ‘கையில காசு இல்ல’.. 8 மாத கர்ப்பிணி மனைவியுடன் ‘100 கிமீ’ நடந்து சென்ற கணவர்..!