Life-ல முதல் தடவை பனியை பார்த்த ஒட்டகம்.. குஷியில் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வாழ்வில் முதன்முறையாக பனியை பார்த்த ஒட்டகம் ஒன்று துள்ளிக் குதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ஐயப்பன் கோவிலுக்கு போன பக்தர் வாங்கிய லாட்டரிக்கு விழுந்த ₹80 லட்சம்.. பரிசு வென்றவரை தேடியலையும் கடை உரிமையாளர்..!

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களை ரசிக்க வைக்கும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக நகைச்சுவை மற்றும் மனங்களை தொடும் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில் முதன்முதலில் பனியை பார்க்கும் ஒட்டகம் ஒன்றின் ரியாக்ஷன் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை பண்ணை மற்றும் விலங்குகள் சரணாலயமான Rancho Grande அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு ஒட்டகம் முதல் முறையாக பனியை பார்க்கிறது. அது உற்சாகமடைந்து குதிக்கத் தொடங்குகிறது. ஆல்பெர்ட் எனப் பெயரிடப்பட்ட அந்த ஒட்டகம் அதன் பிறகு தனது மகிழ்ச்சியை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

அந்த பதிவில்,"நாங்கள் இந்த வீடியோவை TikTok இல் முதலில் பதிவிட்டோம். இது அனைவரையும் மிகவும் மகிழ்ச்சியடையச் செய்ததாகத் தோன்றியது. இதைத்தான் ஆல்பெர்ட் செய்யத் திட்டமிடுகிறார். எனவே நாங்கள் அதை Instagram பயனர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அனைவரின்ஆதரவுக்கும் நன்றி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரப்பட்டது. இதுவரையில் 71,000 முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும் 6000 பேர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர்.

இந்த வீடியோவை பார்த்துவிட்டு நெட்டிசன்கள்,"அந்த ஒட்டகத்தின் மகிழ்ச்சி விலை மதிப்பற்றது" என்றும் "இந்த நாளை இந்த வீடியோ அழகாக மாற்றியுள்ளது" என்றும் "நிச்சயம் ஆல்பெர்ட்டை சந்திக்க வேண்டும்" எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Also Read | "மன்னிச்சுடுங்க".. 25 வருடத்துக்கு முன் நடந்த சம்பவம்.. ராகுல் டிராவிட்டிடம் மன்னிப்பு கேட்ட வங்கதேச பயிற்சியாளர்.. !

CAMEL, CAMEL WITNESSES SNOW

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்